திருப்பத்தூர்-1,
கந்திலி அருகே 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மளிகை ஸ்டோர் உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு 25 ஆயிரம் பணம் மற்றும் மளிகை சாமான்கள் கொள்ளை. கடையின் உரிமையாளர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை! கொள்ளையன் ஒருவர் கைது . போலீசார் விசாரணை
திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியில் வசித்துவரும் சீனிவாசன் (70), இவருடைய மளிகை ஸ்டோர் மற்றும் வீடு ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. சீனிவாசனுக்கு கிருஷ்ணகுமார் வயது 45, மற்றும் ஸ்ரீதர் வயது 50 இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் சொந்தமாக சீனிவாசா மளிகை ஸ்டோர் கடை நடத்தி வருகின்றார்.
இரவு மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் இவரது வீட்டிற்க்கு சென்று, மளிகை சாமான்கள் வேண்டும் என்றும் கூறி கடைக்குள் நுழைந்து, கடையில் உள்ள சீனிவாசன், இவரது மகன் கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை கத்தியை கொண்டு மிரட்டி தாக்கியதில் ஸ்ரீதருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் கூச்சல் போடவே, மர்ம கும்பல் தப்பிச் செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த சரவணன் இவரது மகன் சசிதரன் (23), அவர்களை பிடிக்க முயன்ற போது கத்தியை கொண்டு மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர் சசிதரன் மார்பு பகுதியில் பயங்கரமாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சசிதரனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வருகின்றார்.
படுகாயங்களுடன் இருந்த கடையின் உரிமையாளர் ஸ்ரீதரை, பெங்களூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ள நிலையில்,
கந்திலி அடுத்த புங்கனூர் பகுதியில் சந்தேகப்படும் படியாக திருவள்ளூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த தரணிகுமார் (32) என்கிற ஒருவன் சுற்றித் திறிந்துள்ளான். அப்போது அப்பகுதி மக்கள் அவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சந்தேகத்திற்குரியதாக பதில் அளித்துள்ளார்.
உடனே அப்பகுதி மக்கள் கந்திலி காவல் நிலையத்தில் தெரியப்படுத்தினர்.
கந்திலி காவல்துறையினர் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், இரவு நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக தெரியவருகிறது.
மற்றும் இவருடன் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் கந்திலி காவல் நிலையம் அருகாமை அமைந்துள்ளதால் பொது மக்களுக்கு பீதியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி- கடையின் உரிமையாளர் மகன் கிருஷ்ணகுமார்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment