Saturday, July 25, 2020

வங்கிகளில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்!

பிரபல வங்கிகளில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் பல்வேறு கட்டணங்கள் குறித்த விவரங்களை அனைத்தையும் பார்க்கலாம் வாங்க.

மஹாராஷ்டிரா வங்கி , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் ஆகிய வங்கிகள் இந்த மாற்றங்களை கொண்டுவரவுள்ளன. குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

எதற்கெல்லாம் கட்டணம்!

1. சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் மாத சாரசரியை பராமரிக்கவில்லை என்றால், கட்டணம் விதிக்கப்படும்.

2. பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும்.

3.பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி மாத சராசரி தொகையாக ரூ.1500க்கு பதிலாக ரூ.2000 இருக்க வேண்டும். மீறினால் மாதந்தோறும் நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும்.

4. பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது 3 முறை மட்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளத. அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை.. லாக்கருக்கான வைப்புத்தொகை குறைக்கப்பட்டாலும், லாக்கர் வாடகை நிலுவைத் தொகைக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

5. கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்பு மற்றும் கார்ப்பரேட் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, டெபிட் கார்டு-ஏடிஎம் கட்டணங்கள் ஒரு மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, பணம் திரும்பப் பெறுவதற்கான கட்டணம் ரூ .20 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8.5 ஆகவும் உள்ளன.

6. ஆக்சிஸ் வங்கி இசிஎஸ் பரிவர்த்தனைக்கு இதுவரை கட்டணம் வசூலிக்காமல் இருந்த நிலையில் இனி, ரூ.25 வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 ஆகிய குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கையாள, 1000 எண்ணிக்கைக்கு கையாளுதல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு தொற்று உறுதி

சென்னை:25. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,06,737-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,51,055 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 52,273 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,409-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1329 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 1131 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் இறப்பு. 13923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோயம்பதூரில் இன்று 270 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 167 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் இறப்பு. 1373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தர்மபுரியில் இன்று 30 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 25 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  290 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரியில் இன்று 31 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 14 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 322 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ராணிப்பேட்டையில் இன்று 244 பேர் புதிய தொற்று உறுதி செய்யப்படது. 95 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  1828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சேலத்தில் இன்று 112 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 107 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 778 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருப்பத்தூரில் இன்று 86 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 24 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 349 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வேலூரில் இன்று 212 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 330 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  1132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து குளம் சுத்தம் செய்து செடிகளை நட்டனர்.





திருப்பத்தூர்.
பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமாள் கோவில் அருகில் உள்ள குளத்தை புலிகுட்டை ஊரைச் சார்ந்தவர்கள் தலைமையில்  குலத்தை தூய்மை செய்தனர். 
மேலும் கோயில் அருகில் 150 செடிகள்  வேம்பு,  புங்கை, ஆலமரம், அரசமரம், பூவரசன் போன்ற பல வகை செடிகளை பசுமை தாய்நாடு உறுப்பினர்கள் மற்றும் புலிக்குட்டியை சார்ந்த இளைஞர்கள் சேர்ந்து செடிகளை நட்டனர். 

கிருஷ்ணமூர்த்தி 
செய்தியாளர் 
மக்கள் சந்திப்பு நாளிதழ் 
9442416077

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.59 கோடியாக உயர்வு:



டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.42 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 642,622 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 15,939,175 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9,723,365 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,242 பேர்  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,573,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,337,022 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,406 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 8,50,107 பேர் குணமடைந்தனர்.  

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 148,490 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,428,327 ஆக அதிகரித்துள்ளது.

* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 85,385 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,348,200 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,046 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800,849 ஆக அதிகரித்துள்ளது.

* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,843 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 375,961 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,432 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 319,501 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 45,677 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 297,914 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,289 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286,523 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,097 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 245,590 ஆக உயர்ந்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,201 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205,960 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,192 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,528 ஆக அதிகரித்துள்ளது.

* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,665 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,418 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,812 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,847 ஆக அதிகரித்துள்ளது.

* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,625 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,139 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,595 ஆக அதிகரித்துள்ளது.

* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,375 ஆக அதிகரித்துள்ளது.

* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 992 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,956 ஆக அதிகரித்துள்ளது.

* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,861 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில்  பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு  வருகிறது.

கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு முடக்கம்

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பால், மருந்தகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தயாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளது.

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி ஓட்டல் ஊழியர் உயிரிழப்பு

திருப்பத்தூர்-25
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் டான்சி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏலகிரியில் இருந்து ல்ஹற்றி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கோயம்பத்தூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் பார்த்திபன் என்பவர் மீது பின்னல் வந்த மினி கண்டெய்னர் லாரி  மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆம்பூர் கிராமிய போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நில அளவு கட்டணம் 40 மடங்கு உயர்வு


தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனு கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது அந்த துறையின் கடமை ஆகும்.

மேலும், நிலத்தை அளந்த போது, எதுவும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மறு அளவீடு கோரியும் விண்ணப்பிக்கவும் செய்கின்றனர். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் புல அளவீட்டு புத்தகப்பிரதி, புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லை, மாவட்ட வரைபடம், வட்ட வரைபடம், நகரம் பிளாக் படங்கள், கிராம வரைபடம் ஆகியவை தரப்படுகிறது. இதற்காக நில அளவைத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இக்கட்டணத்தை உயர்த்த நில அளவைத்துறை முடிவு செய்தது. அதன்பேரில் மத்திய நில அளவை அலுவலக இணை இயக்குனர் தலைமையில் ஆலேசானைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும்  கிராம வரைபடங்கள் கட்டணம், உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், புலப்பட நகல் வழங்குதல் உள்ளிட்டவைக்கு கட்டணம் உயர்த்த பரிந்துரை செய்தது.

அதன்பேரில் இதற்கான கட்டணத்தை  உயர்த்தி வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்: புல அளவீட்டு புத்தக பிரதி ஏ4 அளவு ரூ.20ல் இருந்து ரூ.50 ஆகவும், ஏ3 அளவு ரூ.100 ஆகவும், புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆகவும், கோணமானியை பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுதல் ரூ.30ல் இருந்து ரூ.300 ஆகவும்,  நில அளவரின்  முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ50ல் இருந்து ரூ400 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. உட்பிரிவு மற்றும் பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புன்செய் நிலம் ரூ30ல் இருந்து ரூ1000 ஆகவும், நன்செய் நிலம் ரூ50ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆகவும்,

மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டுக்கான கட்டணம் புன்செய் நிலம் ரூ60ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆகவும், நன்செய் நிலம் ரூ60ல் இருந்து ரூ4 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நில அளவை குறியீட்டின் தொகை செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 சதவீதத்தில் இருந்து 800 சதவீதம் ஆகவும், மாவட்ட வரைபடம் (வண்ணம்) ரூ189ல் இருந்து ரூ500 ஆகவும், மாவட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூ51ல் இருந்து ரூ300 ஆகவும், வட்ட வரைபடம் ரூ357ல் இருந்து ரூ1000 ஆகவும், வட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூ51ல் இருந்து ரூ500 ஆகவும், நகரம் பிளாக் வரைபடங்கள் ரூ27ல் இருந்து ரூ50 ஆகவும், கிராம வரைபடம் ரூ85ல் இருந்து ரூ200 ஆகவும், உட்பிரிவு கட்டணம் கிராமப்புறத்தில் ரூ40ல் இருந்து ரூ400 ஆகவும், நகராட்சி பகுதிகளில் ரூ50ல் இருந்து ரூ500 ஆகவும்,  மாநகராட்சிகளில் ரூ60ல் இருந்து ரூ600 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் செல்வராஜ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நில அளவை பணிகள் சார்ந்த பணிகளுக்கான பயனாளர் கட்டணங்களை உயர்த்தி அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக உரிய அலுவலர்களுக்கு தேவையான அறிவுரை வழங்க கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் பல மடங்கு மின்கட்டணத்தால் பொதுமக்கள் துவண்டு போயுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் நில அளவை கட்டணமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Friday, July 24, 2020

கொரோனா பிரச்சனை முடியும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை... அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பிரச்சனை முடியும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை... அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளி திறப்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், மாநிலத்தின் சூழ்நிலை கருதி கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்களின் கருத்து கேட்டு, கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்றார்.

10 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இலவச மின்சாரம் குறித்து முதலமைச்சரும் மின்துறை அமைச்சகம் தான் முடிவு செய்வார்கள் என்றார். மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்குவது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், பிளஸ்-1 பிளஸ்-2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக சிறிய குழந்தைகளுக்கு வழங்குவது கடினமாக உள்ளது என்றார்.

1-ல் இருந்து 5 வரை 6 முதல் 8 வரை, 9,10 வரை எப்படி வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து முடிவு செய்யப்படும் என்றும் 14 தொலைக்காட்சிகளில் இலவசமாக வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இந்த வகுப்புகள் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கடன் உதவிகளை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் வசதி இல்லாததால் தற்காலிகமாக விவசாயிகளுக்கு கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த வங்கிகளில் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து கடன் வழங்கப்படும் என்றார்.

எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - புதுச்சேரி முதல்வர் உறுதி

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் உருவச் ...சற்றுமுன் - Tamil Dhinasari

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி-24,
புதுவையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த செயலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரவிந்தரும், கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், புரட்சித் தலைவரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களைத் தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்''. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டபேரவைக் கூட்டம் மதியம் 3 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்த செயல் கண்டனத்குரியது. இந்த செயல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், கந்தசஷ்டி கவசம் குறித்த அவதூறாக பேசியவர்கள் புதுச்சேரிக்கு எப்படி வந்தார்கள்? ஏன் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, கந்தசஷ்டி கவசம் பற்றி யார் அவதூறாக பேசி இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்விவகாரம் தொடர்பான ஏற்கனவே தமிழக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இ-பாஸ் இல்லாமல் எப்படி புதுச்சேரி வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பதிலளித்தார்.

புதுச்சேரியில் வாட்ஸ் அப்பில் மிரட்டுவது அதிகரித்துள்ளது.. தேவையற்ற தவறான தகவல்களை சில சமுக விரோதிகள் பரப்புவது கூடிவிட்டது. இதன்மீது கடும் நடவடிக்கை இருக்க வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வலியுறுத்தினார். இதற்கு சைபர் கிரைம் துறை இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் முதல்வர் நாராயணசாமி உறுதியளித்தார்.

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்கள் விபரம்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே!

16-ஜூலை -2020 அன்று தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுதிய அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

** உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க: **
Agaram Foundation - https://agaram.in/contact
Anandham Youth Foundation - http://www.anandham.org/wp-content/uploads/2020/05/student-application-2020.pdf
Gold Heart Foundation - http://www.goldheartfoundation.org/contact.html
Hope3 Foundation - https://www.hope3.org/apply2020
Maatram Foundation - https://www.maatramfoundation.com/admissions/
Mugavari  Foundation - http://www.mugavarifoundation.org/
Ramakrishna Mission Student’s Home [Polytechnic] - https://sites.google.com/view/rkmshome-admissions-2020
SEEEDS - https://www.seeeds.org/scholarship
Shooting Star Foundation - https://tinyurl.com/ybcy2rwr
Team Everest - http://www.everestscholarship.com

** முக்கியமான குறிப்பு : மேற்கண்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிப்பதில்லை. மேலே உள்ள இணைப்புகள் மூலம் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும். **

சுதந்திர தினம் கொண்டாட வழிகாட்டு முறைகளை வெளியிட்ட மத்திய அரசு

சுதந்திர தினம் எப்படி கொண்டாடப்பட வேண்டும்...? வழிகாட்டு முறைகளை வெளியிட்ட மத்திய அரசு
டெல்லி செங்கோட்டை

கொரோனா முன்கள பணியாளர்களை சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திர தின விழாவுக்கான வழிகாட்டு முறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் குறைந்தளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுதந்திர தின விழா இணையதளம் வாயிலாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அதிகளவில் பார்வையாளர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களை சுதந்திர தின விழாவிற்கு அழைக்க வேண்டும் என்றும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 24-07-2020 இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு: 88 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் - 24.

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 63,182 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 21,38,704 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,504 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 1,43,297 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,320ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 1,299 பேருக்கும்,
செங்கல்பட்டில் 419 பேருக்கும்,
காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும்,
மதுரையில் 326 பேருக்கும்,
திருவள்ளூரில் 378 பேருக்கும்,
விருதுநகரில் 424 பேருக்கும்,
கிருஷ்ணகிரியில் 82 பேருக்கும்,
தருமபுரியில் 36 பேருக்கும்,
வேலூரில் 174 பேருக்கும்,
திருவண்ணாமலையில் 134 பேருக்கும்,
ராணிப்பேட்டையில் 222 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மரணம் - 1. 288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் தடை செய்யப்படவிருக்கும் சீன ஆப்ஸ்.....

Google Playstore மற்றும் Apple Playstore-இல் இருந்து Helo Lite, ShareIt Lite, Bigo Lite மற்றும் VFY Lite ஆகிய சீன பயன்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சீன மொபைல் ஆப்ஸ்களைத் தடைசெய்ய முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடஒதுக்கீட்டை பறிக்க நினைப்பவர்களுக்கு துணைபோகவேண்டாம் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

anbumani ramadoss: Latest News, Videos and anbumani ramadoss ...

மத்திய அரசு பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரிமிலேயர் முறையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய திருத்தம் குறித்து பா.ம.க அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், ‘மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயரை தீர்மானிக்க மொத்த சம்பளமும் சேர்க்கப்படும் என்ற முந்தைய திட்டம் கைவிடப்பட்டு, வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் சேர்க்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், சமூகநீதியைக் காக்க அது உதவாது என்பதால் புதிய திட்டத்தையும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சம்பளம், வேளாண் வருமானம் ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கும், மத்திய அரசின் முடிவை ஏற்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தீர்மானித்ததற்கும் பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து மத்திய சமூக நீதித் துறையும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் நடத்திய ஆலோசனையில், கிரிமீலேயரை கணக்கிடுவதில் பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயுடன், சம்பளத்தை முழுமையாக சேர்ப்பதற்கு பதிலாக, வருமானவரிக்கு உட்படுத்தப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளலாம் என்றும் கிரீமிலேயர் வரம்பை ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக உயர்த்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதற்காக மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பது போலத் தோன்றினாலும், புதிய திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது என்பதே உண்மை.

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் அறிவித்த புதிய வருமானவரி முறையின்படி, நிரந்தரக் கழிவு ரூ.2.50 லட்சம் தவிர வேறு எந்த வரி விலக்கும், கழிவுகளையும் கோர முடியாது. அத்தகைய சூழலில் அரசு அல்லது பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், சம்பளத்தை மட்டுமே ஒரே வருவாய் ஆதாரமாகக் கொண்டவர்களின் மொத்த சம்பளத்துக்கும், நிகர வருமானத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கூடுதலாக பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் கிடைக்கும் குடும்பங்களாக இருந்தால், அவர்களால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. புதிய திட்டமும் சமூக அநீதியாகவே அமையும்.

நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை, கிரீமிலேயர் வரம்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பறிக்க மத்திய அரசு துடிப்பது ஏன்? என்பது தான் தெரியவில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் சம்பளமும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்பட்டது தான் பிரச்சினையில் தொடக்கம் ஆகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று நீதிமன்றங்கள் ஆணையிட்ட நிலையில், பொதுத்துறை, தனியார்துறை பணியாளர்களின் சம்பளம் கணக்கில் கொள்ளப்பட்டது 1993-ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு எதிரானது என்பதால், அந்த முறையை கைவிடும்படி சொல்வது தான் சரியான தீர்வாக இருக்கும். அதைவிடுத்து, அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிடுவது 1993-ஆம் ஆண்டின் குறிப்பாணைக்கு எதிரானது.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இப்போது தான் முதல் தலைமுறையினர் மத்திய அரசு வேலை மற்றும் உயர்கல்வியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குள்ளாகவே பல்வேறு தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி, சமூகநீதி மரம் முழுமையாக வளர்வதற்கு முன்பாகவே அதை வெட்டி வீழ்த்த பலர் முயல்வதும், மத்திய அரசின் முடிவுகள் அதற்கு சாதகமாக இருப்பதும் வேதனையளிக்கிறது.

கடினமான நிபந்தனைகளை விதித்து, பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் கிரீமிலேயராக அறிவித்து விட்டு, அவர்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறித்து, பொதுப்பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்பது தான் சிலரது விருப்பம் ஆகும். இதற்கு மத்திய அரசு எந்த வகையிலும் துணை போகக்கூடாது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முழுமையாக அவர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்கு பெரும் தடையாக உள்ள கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும். அது உடனடியாக சாத்தியப்படாவிட்டால், சம்பளத்தை சேர்க்காமல், கிரீமிலேயர் வரம்பை இப்போதுள்ள 8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பி


சேலம் : ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் தெரிவித்த மலைவாழ் மாணவியின் 2 ஆண்டுகளுக்கான கல்விச்செலவை சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ளது கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம். இதில் 33 மலைவாழ் குக்கிராமங்களை கொண்ட பாலமலை பஞ்சாயத்து உள்ளது. இம்மலை கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில்தான் இப்பகுதிகளுக்கு சாலை வசதி மற்றும் மின்சார வசதி கிடைத்துள்ளது. இங்கு ராமன் பட்டி என்ற மலை கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளியில் 140 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் நேற்று முன் தினம் மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பிஅப்போது அங்கு 10-ம் வகுப்பு முடித்த மாணவி ஜெயந்தி (16) எஸ்.பி.,யை சந்தித்து தனது ஐ.ஏ.எஸ் படிக்கும் தனது ஆசையை தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை தனது சேலம் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் வழங்கி 2 ஆண்டுகள் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாணவிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.



READ MORE NEWS
 www.tamilgarudanews.blogspot.com

ஒரே நாளில் 49,310 பேருக்கு பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 49,310 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில பரவி வருகிறது. கடந்த இரு நாட்களாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் உயரிழப்பு எண்ணிகை பிரேசில் அமெரிக்கா நாடுகளை போல் உச்சமாகி வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33,326 பேர் குணம் அடைந்ததால், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8,17,209 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் 740 பேர் மரணம் அடைந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,601 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிராவில் 9,895 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு 347,502 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் ஒரே நாளில் 6484 அதிகரித்துள்ளது. இது வரை மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து 194253 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 12854 பேர் உயிரிழந்துள்ளனர்.

2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு நேற்றுஒரே நாளில் 6472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு 192964 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5210பேர் குணம் அடைந்தனர். இதனால் மொத்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 136793 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 52939 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 3232 பேர் உயிரிழந்துள்ளனர்.

Thursday, July 23, 2020

சென்னையில் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரத்தை நெருங்கியது!

சென்னை:23
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரம் நெருங்குகிறது. அதாவது இன்று ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை போல் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

Gold price tops record Rs 40,000 mark as recession fears deepen ...The Health Benefits of Wearing Silver Jewelry

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.74 உயர்ந்து ரூ.4,847-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.50 அதிகரித்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து நகைக் கடைக்காரர்கள் கூறுகையில் இந்த ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை எட்டும் என்றனர். இதனால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர்.

கொரோனா இன்று ஒரு புதிய உச்சத்தை தொட்டதா ?

திருப்பத்தூர் - 23,
தமிழகம் முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6472 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1336 நபர்கள். 5210 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 88 நபர்கள் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 74 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 728 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 465 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 257 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 நபர்கள் தொற்றால் இறந்துள்ளனர்.
 
😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇

மத்திய அரசின் நான்கு அவசர சட்டங்களும், விவசாயிகளின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகும் - வைகோ

மலராத மறுமலர்ச்சியும் வைகோவின் ...


சென்னை-.23
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி வரும் துயரத்தால் கடந்த ஐந்து மாதங்களாக நாட்டு மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, வாழ்வாதாரங்களை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு, எதிர்காலம் இருள் அடைந்து கிடக்கின்ற வேதனையில் தவிக்கின்றனர். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச்சாதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாகும். நாடாளுமன்றத்தில் விவாதித்து, மாநிலங்களின் கருத்துகளையும் அறிந்து வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவராமல், தானடித்த மூப்பாக மோடி அரசு செயல்படுவது, இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்து, மாநில உரிமைகளை நசுக்கும் 'பேரரசு' மனப்பான்மை ஆகும்.

வேளாண் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, டெல்லியின் ஏகபோக ஒற்றை அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மேற்கண்ட நான்கு சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், விவசாயிகள் வேளாண் தொழிலுக்கு பெற்று வரும் இலவச மின்சார உரிமையை, மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 முற்றிலும் நிராகரிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 திருத்தச் சட்டம் தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களிலிருந்து நீக்கி உள்ளது. இதனால் சந்தையில் இவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமை பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். மேலும் பதுக்கல்காரர்களால் விலையேற்றம் மக்களைப் பாதிக்கும்.

"ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை" என்பதை நிலைநாட்ட வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020 கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறுவது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது' என்ற முதுமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. நடைமுறைச் சாத்தியமற்ற, விவசாயிகளுக்குப் பாதகமான இச்சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். விவசாயிகளிடம் நேரடியாக அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை கொள்முதல் செய்வது மட்டுமின்றி, சந்தையை தங்கள் விருப்பப்படி பெருநிறுவனங்கள் ஆட்டிப் படைக்கும் நிலைதான் உருவாகும். தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக்குழுச் சட்டங்கள், வேளாண் கொள்முதலை இனிக் கட்டுப்படுத்த முடியாது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு, தனியார் கொள்முதல் நிலையங்கள் பெருகும்.

இது விவசாயிகளுக்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம் அல்லவா? விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியில் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கிறது. இதனால் வேளாண் தொழிலை பெரு வணிகக் குழுமங்களிடம் பறிகொடுத்துவிட்டு, விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி, சொந்த மண்ணிலேயே பஞ்சைப் பராரிகளாக அலையும் நிலையை உருவாக்கிவிடும். அந்த நிலைமை ஏற்பட வேண்டும் - வேளாண் நிலங்களைப் பறிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டமாகும்.

விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27 ஆம் நாள், விவசாயிகள் நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது என்றும், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மாவட்டங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரகடனம் செய்திருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அவசரச் சட்டங்களைத் திருப்பப் பெறக்கோரியும் ஜூலை 27 ஆம் நாள் நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க கழகக் கண்மணிகளும், பொதுமக்களும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

சென்னைக்கு திரும்ப இ-பாஸ் சுமார் ஐந்து லட்சம் விண்ணப்பம் குவிகிறது.

சென்னை:23
             சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னைக்கு வருவதற்கு மட்டுமே சுமார் 5 லட்சம் பேர் இ பாஸ் கோரி விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் 5849 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 186492 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 89561 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையை விட மற்ற மாவட்டங்களில் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சென்னையில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. ஆனால் தற்பொழுது சென்னையில் பாதிப்பு குறைய தொடங்கியது. அதிலும் தற்போது தினசரி கேஸ்கள் 1200க்கும் குறைவாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை பெரிய அளவில் சென்னை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது

கடந்த மாதம் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக லாக்டவுன் போடப்பட்டது. மிக தீவிரமான லாக்டவுன் போடப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். சென்னையில் பாதிப்பு அதிகமானதால், தீவிர லாக்டவுன் கொண்டு வரப்பட்டதாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. மாறாக மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னைக்கு மீண்டும் மக்கள் திரும்ப முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மீண்டும் வந்து தங்கள் பணிகளை தொடங்க இவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். சென்னையில் நிலைமை நன்றாக இருப்பதால் மீண்டும் சென்னைக்கு திரும்ப இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக இ பாஸ் கோரி மக்கள் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர். சென்னைக்கு மீண்டும் வர வேண்டும் என்று ஏறத்தாழ 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மொத்தமாக 492149 பேர் அடுத்தடுத்து இ பாஸ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் பலர் பணியில் சேர வேண்டும் என்ற காரணத்தை கூறி உள்ளனர். இன்னும் சிலர் எந்த விதமான குறிப்பிடத்தகுந்த காரணத்தையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையில் கொரோனா மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மிகவும் கண்டிப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக இ பாஸ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் கறாரான நடவடிக்கையை கடைபிடிக்கிறார்கள். அதன்படி மொத்தம் 1,61,764 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்திய எல்லையில் அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் குவிப்பு..!

டெல்லி - 23. பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் எல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. ராணுவ வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: சீன ராணுவம் எல்லையில் இருந்து பின் வாங்குவதற்கு தயாராக இல்லை. எல்லைப் பகுதிகளில் சுமார் 40,000 சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வான்வெளி தாக்குதல் தடுப்பு கருவிகள், நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து தாக்கக்கூடிய பீரங்கிகள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு வடக்கு பகுதியில் சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கவில்லை. இந்தியாவுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மதிக்கவில்லை. ராணுவ உயர்மட்ட அளவிலான அழுத்தம் இந்த விஷயத்தில் தேவைப்படுகிறது. தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் சில வாரங்களுக்கு முன்பாக சீனாவுடன் நடத்தியது போன்ற பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட தேவையுள்ளது. அல்லது சீன ராணுவம் பின்வாங்குவதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக, அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

China's Modernizing Military | Council on Foreign Relations
சீன ராணுவம்

தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.! - ஆளுநர் மாளிகை

அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Summer rains in Tamil Nadu continue Weather Research Center ...

சென்னை:

          தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை,நீலகிரி,சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி: 2020-21 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.  புதுச்சேரியில் கடந்த
20ம் தேதி கவர்னர் உரையும் அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை செயலகம் அறிவித்தது. 20ம் தேதியன்று சட்டசபைக்கு கவர்னர் வராமலே பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் கோப்புக்கு ஒப்புதல் தரப்படுமா? என்று கிரண்பேடியிடம் கேட்டதற்கு, பட்ஜெட்டுக்கு ஒப்புதலை தந்துள்ளேன் சட்டப்பேரவையில் ஆளுநரான என்னை உரையாற்ற அழைத்தனர். அதன்படி வரும் 24ம் தேதி (நாளை) சட்டப்பேரவையில் உரையாற்றுகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.



யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் ஒருவர் கைது

கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி உரிகம் வனச்சரகத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் தம்மண்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை பாதுகாக்க பிலிக்கல் காட்டுப்பகுதியில் தற்காலிக வேட்டை தடுப்பு முகாம் அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர் -22.

திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி, காந்தி மஹால் திருமண மண்டபம் அருகில் ஒரே வீட்டில் 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  3 நபர்கள் தனிமைபடுத்தி உள்ளனர். ஆதியூர் செல்லும் சாலை அடைக்கப்பட்டுள்ளது .





இன்று பதவியேற்ற அதிமுக எம்பிகள் மூன்று பேருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: அதிமுக எம்பிகளாக பதவியேற்ற மூன்று பேருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலங்களின் தேவைகளை மத்தியில் எடுத்துரைத்து மக்கட்பணியாற்ற, மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பொறுப்பேற்றிருக்கும் திரு.கே.பி.முனுசாமி அவர்கள், டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் மற்றும் திரு.ஜி.கே.வாசன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.



+2 மாணவர்கள் மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: +2 மாணவர்கள் மறுக்கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு வரும் ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.


அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது. பிரதமர் மோடி உரை

https://www.hindustantimes.com/rf/image_size_444x250/HT/p2/2020/03/19/Pictures/_738d9226-69ff-11ea-963c-5f43816952e0.png

டெல்லி: அமெரிக்க - இந்தியா தொழில்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இப்பொது உலகிற்கு சிறப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது. மேலும் தொழில் செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலக பொருளாதார நிலையை எதிர்கொள்ள உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 22, 2020

நியாயவிலை கடையில் தரமற்ற அரிசி ! பொதுமக்கள் புகார்!

நியாயவிலை கடையில் தரமற்ற அரிசி ! பொதுமக்கள் புகார்!


வேலூர் - 22, 
           வேலூர் சலவன்பேட்டை லட்சுமிபுரம், அமுதம் -1 நியாயவிலை கடையில் பிரதமர் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததன்  அடிப்படையில்  இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 3வது மண்டலம் 37 வது வார்டு அனைத்து பாஜக வினர் இணைந்து பத்திரிக்கையாளர் துணையுடன் நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். 

           அதன் அடிப்படையில் தரமற்ற அரிசி இருப்பதும். மேலும் கடையை சுற்றிலும் சுகாதாரமற்று காணப்படுவதை கண்டு நியாயவிலைகடை விற்பனையாளரிடம் விசாரித்தபோது 'எங்களுக்கு அரசு அனுப்பும் அரிசியை தான் நாங்கள் வழங்குகிறோம்'. என்று தெரிவித்தனர். 

        ஆனால் பிற அரிசிமூட்டைகளை பிரித்துப்பார்த்தபோது நல்ல அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

          அதன்பின்னர் தரமற்ற அரிசி பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற்று நல்ல அரிசியை வழங்குகிறோம் என நியாய விலைக்கடை விற்பனையாளர் தெரிவித்தார். 
              
          தரமான அரிசியை வழங்கவேண்டும், நியாயவிலை அங்காடி அருகில் சுத்தமாக பராமரிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய பிரதேச கவர்னர் இறப்புக்கு தமிழக முதல்வர் இரங்கல்

சென்னை : மத்திய பிரதேச மாநில கவர்னர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை  பலனின்றி (21.7.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான்  வேதனை அடைந்தேன்.  மூத்த அரசியல்வாதியான லால்ஜி டாண்டன், உத்தர பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பீகார் மாநில ஆளுநராகவும்  திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பொது வாழ்விலும், மக்கள் சேவையிலும் இவருடைய பணி மகத்தானது.  

லால்ஜி டாண்டனின் மறைவு, உத்தர பிரதேச மாநில மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை  பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Tuesday, July 21, 2020

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்

இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்து பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை latest tamil news சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர், ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற ஐ.ஏ.எஸ். அமுதா தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரின்

பிரதமர் அலுவலக இணைச் செயலளர் அமுதா ஐ ஏ எஸ் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் .


நாளை முதல் ஊரடங்கு கிடையாது! - முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: கொரோனா பிரச்னைக்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. நாளை (ஜூலை 22)முதல், கர்நாடகாவில் ஊரடங்கு இருக்காது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது. பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்பதால், மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நிலைநாட்டி கொண்டே கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும். கொரோனாவிற்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

மஹாராஷ்டிரா, தமிழகத்தில் இருந்து வருபவர்களால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. கொரோனா பிரச்னைக்கு நிபுணர்கள் ஒரு புதிய திட்டத்தை தெரிவித்துள்ளனர். பாதிப்பை கண்டறிதல், தடமறிதல், பரிசோதனை, சிகிச்சை, மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கேரளத்தில் ஒரே நாளில் 720 பேருக்கு கொரோனா தொற்று

latest tamil news
பினராயி விஜயன்
திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா தொற்று ஒரே நாளில் மேலும் 720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலத்தின் பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளத்தில் இன்று புதிதாக 720 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,994 ஆக உயர்ந்தது. இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 8,056 பேர் சிகிச்சையில் உள்ளது.

➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠

செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சந்தாதாரர்களிடமிருந்து சந்தாவிற்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது; மீறி வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் .

திமுக நகர செயலாளர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை - 21.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு. கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கோட்டை பாபு