Saturday, November 28, 2020

திருப்பத்தூர் அருகே தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 


    திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 

 இந்த நிலையில் குப்பை கழிவுகளை தெருக்களில் கொட்டித் தேக்கி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.  நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி ஒன்றியம் இதில் கவனத்தைக் கொண்டு தேங்கியுள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

திருப்பத்தூர் மாவட்டம் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் -28

    திருப்பத்தூர் மாவட்டம் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி தமிழக முதல்வர். எடப்பாடி .பழனிச்சாமி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஒரு வருடம் முடிந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் பிறந்தநாள் விழா, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் திறப்பு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைப்பெற்றது.

விழாவில்  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித்துறை புதிய  அலுவலகத்தை திறந்து வைத்து நூல்களை வெளியிட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பெற்று கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விரைவில் அரசு மருத்துவ கல்லூரி வர அனைத்து ஏற்பாடுகளும் நடைப்பெற்று வருகிறது எனவும் மேலும் சுதந்திரத்திற்கு பிறகு வாணியம்பாடி அடுத்த நெக்னாம்மலை மழைவாழ் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது  வரலாற்று சாதனை ஆகும் என தெரிவித்தார்.

திருப்பத்தூர் நகராட்சியில் சுமார் 105கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் முடியும் தருவாயில் உள்ளதால் மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக வரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திலே திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை  கட்டுபடுத்திய அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் வாழ்த்துக்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

கோழி கழிவுகள் ஆற்றில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா, மிட்டூர் அடுத்த விளாங்குப்பம் செல்லும் வழியில்  உள்ள ஆற்றில்  பல வருடங்களுக்கு  பிறகு நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் இந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது. அந்த நீரில் கோழி கழிவுகள் அதிகம் கலந்து வருகிறது.

இந்த ஆற்றில் மிட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கோழி கழிவுகளை அதிகம் கொட்டப்படுகிறது எனவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால் இதை தடுக்கும் வகையில் சுற்றுப்புற சுகாதார துறை சார்ந்த நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

பொது பொது மக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம்


 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 16 நாட்களாக குடிநீர் வழங்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதி -1 மற்றும் 2 உள்ளது.  இங்கு சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன .
 இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் தர்மபுரி தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 ஆனால் கடந்த 16 நாட்களாக இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

 இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஓய்வு பெற்ற மின்சார வாரிய அலுவலர் எஸ் விஜயன் தலைமையில் காலிக்குடங்களுடன் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியிலுள்ள நகராட்சி குடிநீர் மற்றும் வீட்டு வரி வசூல் செய்யும் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.

குடிநீர் வழங்காதது குறித்து பொதுமக்கள் கூறுகையில் தென்பெண்ணை ஆற்று பகுதியில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் அனுப்பும் பணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் தராததால் தண்ணீரை அவர்கள் அங்கிருந்து மோட்டார் மூலம் திருப்பத்தூர் பகுதிக்கு அனுப்பவில்லை என குற்றம் சாட்டினார்கள்.

அப்போது அவர்களிடம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உறுதி அளித்தார். அதன் பேரில் அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

சாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்ல தடை, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் (29-11-2020   & 30-11-2020) ஆகிய இரு நாட்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் இரு நாட்களும் கிரிவலம் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.  
தீபத் திருவிழா நாளன்று வெளியூர்களில் இருந்து பக்தர்கள்,  பொதுமக்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.  

எனவே வெளியூர் பக்தர்கள்,  பொதுமக்கள் தீபத் திருவிழாவை காண திருவண்ணாமலை நகருக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Wednesday, November 25, 2020

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணிக்கு திறப்பு.. வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம் ...

 பொதுப்பணித்துறை ஆய்வு

சென்னை: சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு 1000 கனஅடி திறக்கப்பட உள்ளது. ஏரி முழு கொள்ளவை எட்டிய உடன் ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரி செம்பரம்பாக்கம் ஏரி. 9 கிலோமீட்டர் நீளமும் மொத்தம் 24 அடி உயரம் உள்ள இந்த ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றில் நீர் வரும். அப்படியே அது கடலில் கலக்கும். இந்த ஏரியில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேறியதால் கடந்த 2015ல் வெள்ளம் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
 
இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 21.55 அடி, மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடி, நீர்வரத்து 4027 ஆக உள்ளது. இதனிடையே மழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது ஏரி இன்று நிரம்பிய உடன் அப்படியே தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. ஏரியில் வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட முக்கிய அறிக்கையில், இன்று(25.11.2020) மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால் காவலூர்,குன்றத்தூர். நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம் - தமிழ்நாடு வெதர்மேன்

https://tamil.oneindia.com/img/2020/11/nivar-cyclone44-1606274546.jpg 

சென்னை: நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது, கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை இன்று அல்லது நாளை நிவர் புயல் தாக்க உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து உள்ளது.

நிவர் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் புயல் தமிழகத்தில் சென்னை மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது

தமிழ்நாடு வெதர்மேன் இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது, கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம். டெல்டாவிற்கு கிழக்கு பகுதியிலும் இலங்கைக்கு மேலே வடகிழக்கு பகுதியில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. காற்றின் வேகம் இங்கு ஏற்கனவே 100 கிமீரை நெருங்கிவிட்டது.
 
கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம். நிவர் புயலை கணிப்பது கடினமாக இருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சி மையங்களின் கணிப்புப்படி இந்த புயல் காரைக்கால் - பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் 24 மணி நேரத்தில் நிறைய மாற்றங்கள் நடக்கும்.
 
கடைசி நேரத்தில் நிறைய மாறும். நிறைய கட்சித்தாவல்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த புயல் மொத்தமாக மேற்கு நோக்கி நகர்வதற்கு கொஞ்சம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா பகுதிகளை இந்த புயல் கண்டிப்பாக தாக்காது. டெல்டாவில் லேசான மழை பெய்யும் ஆனால் புயல் தாக்காது. இதனால் டெல்டா மக்கள் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை.
 
நிவர் புயல் பெரும்பாலும் பாண்டிச்சேரி சென்னை இடையே கரையை கடக்கும் . மஹாபலிபுரம் - கல்பாக்கம் இடையே எங்காவது கரையாக கடக்கலாம். இன்று இரவு அல்லது நாளை காலை இந்த புயல் கரையை கடக்கும். 
 
மஹாபலிபுரத்திற்கும் - சென்னைக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை.
இந்த புயலில் சின்ன மாற்றம் ஏற்பட்டு லேசாக வழி மாறினால் கூட சென்னையில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயலை தடுக்கும் வகையில் காற்று மாற்றம் ஏற்படவில்லை என்றால்.. இந்த புயல் அதிக வேகம் பெறும். தானே புயலின் வேகத்தில் (140 கிமீ) அல்லது அதற்கும் அதிகமான வேகத்திலும் கூட இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
 
இந்த புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 100 கிமீ வேகத்தில் கூட காற்றும் வீசும். 26ம் தேதி காலை அதிக காற்று வீசும் .

காற்று வீசும் வேகம்
 
 140 கிமீ - பாண்டிச்சேரி - மரக்காணம்- மஹாபலிபுரம் (இன்று இரவில் இருந்து நாளை காலை வரை) 
 
100 கிமீ- கடலூர் கடலோரம் (இன்று இரவு வரை) 
 
 100 கிமீ - சென்னை கடலோரம் (நாளை காலை வரை) 
 
100 கிமீ - செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் (நாளை காலை வரை) 
 
 80-90 கிமீ- ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவள்ளூர் (நாளை மதியம் வரை) பகுதியில் காற்று வீசும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

புயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டுகளுக்கு என்ன அர்த்தம்?



புயல் ஏற்படும் காலங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை செய்யும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இது புயல், காற்று வீசும் திசை, புயல் கரையை கடக்கும் போன்ற பல விஷயங்களை உணர்த்தும் வண்ணம் 1 முதல் 11 வரை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதற்கான அர்த்தம் என்னவென்று இப்போது தெரிந்து  கொள்ளலாம்


1-ம் எண் கூண்டு:


புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் தற்போது உருவாகியுள்ளது என்று அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் சற்று பலமாக காற்று வீசியது என்று பொருள்.

2-ம் எண் கூண்டு:


புயல் உருவாகியுள்ளது என்பதை எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற வேண்டும்.

3-ம் எண் கூண்டு:


திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

4-ம் எண் கூண்டு :


துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. மூன்று முதல் நான்கு எண் கூண்டுகள் துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுவதாக தெரியப்படுத்துகின்றன.

5-ம் எண் கூண்டு:


புயல் உருவாகியிருப்பதை குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

6-ம் எண் கூண்டு:


துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும். இந்த நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

7-ம் எண் கூண்டு:


துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம். 5,6 மற்றும் 7 எச்சரிக்கை கூண்டு துறைமுகத்துக்கு ஏற்றப்பட்ட அபாயத்தை குறிக்கும்.

8-ம் எண் கூண்டு:


மிகுந்த அபாயம் என்பது பொருள். தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவாகியுள்ளது என்று பொருள்.

9-ம் எண் கூண்டு:


தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது என்று பொருள். அது துறைமுகத்தை புயல் வலது பக்கமாக என்பது பொருள்.

10-எண் கூண்டு:


தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது என்று பொருள். அது துறைமுகம் அல்லது அதன் கரஓ அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் கூண்டு:


இந்த எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த கூண்டு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS