Saturday, August 22, 2020

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெட்ராஸ்!

 

 ரோமானிய காலத்திற்கு முந்தைய காலனித்துவத்திற்கு முந்தைய கடலோர கிராமம் ரோமானிய வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோமோவுக்கு முந்தைய சேபியன்களின் கேவ்மேன் குடியேற்றங்கள் காணப்பட்டன.
தேவரம் பாடல்களில் காணப்படும் இடம் பற்றி குறிப்பிடுங்கள். அந்த இடம் மதரசப்பட்டனம் என்று அழைக்கப்பட்டது.
ஒரு விஜயநகர் கட்டளையின் புதிய கண்டுபிடிப்பு மதரசப்பட்டனம் என்ற இடத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.
1639 ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆர்மகனில் (துகராஸ்பட்னம் / மச்சிலிபட்னம்) இருந்து ஒரு நிலத்தை பேச்சுவார்த்தை நடத்த ஆங்கிலேயர்கள் சந்திரகிரியில் உள்ள டமர்லா வெங்கடாத்ரி நாயக்கின் நீதிமன்றத்திற்கு வருகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கான தலைமை பேச்சுவார்த்தையாளர்கள் ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ் தினம் மற்றும் நாகபட்டனுடன் துப்பாக்கி தூள் தயாரிப்பாளர்.
3 சதுர மைல் அளவிலான ஒரு நிலத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகை வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் மெட்ராஸின் பிறப்பு 22 ஆகஸ்ட் 1639.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கட்டுமானம் 23 ஏப்ரல் 1640 அன்று தொடங்குகிறது.
1642 முதல் நாயக்கர்கள், நவாப்கள், கிங்ஸ் இடையே அடிக்கடி தகராறுகள் மற்றும் சண்டைகள்.
மைலாப்பூரின் போர்ச்சுகல் குடியேறிகள் - பெரும்பாலும் செயின்ட் தோமா அல்லது செயின்ட் தோமே என அழைக்கப்படுபவை பிரிட்டிஷ் பாதுகாப்பை நாடுகின்றன.
பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு ஆளுநரான டூப்ளிக்ஸ், பிரிட்டிஷின் செழிப்பைக் கண்டு மெட்ராஸைக் கைப்பற்ற முடிவுசெய்து, 1748 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கிடையில் கையெழுத்திட்ட ஒரு உடன்படிக்கைக்குப் பின்னர் திருப்பித் தரப்படுவதற்கு மட்டுமே பிரிட்டிஷாரைத் தோற்கடித்தார். இந்த ஒப்பந்தம் ஐக்ஸ் லா சேப்பல் என்று அழைக்கப்படுகிறது. ஒப்பந்தம் நடக்கவில்லை என்றால், இன்று நாம் அனைவரும் அநேகமாக பிரஞ்சு பேசுவோம், ஆங்கிலம் அல்ல. பிரெஞ்சு படையெடுப்பிற்குப் பிறகு, மெட்ராஸ் ரெஜிமென்ட் கடலூர் செயின்ட் டேவிட் கோட்டையில் உருவாக்கப்பட்டது - இந்திய தந்தை, பாகிஸ்தான் இராணுவம். அப்போதிருந்து பிரிட்டிஷ் ஆட்சி பிடிக்கத் தொடங்குகிறது.

    இந்த நகரத்தில் நாட்டின் முதல் தொலைபேசி பரிமாற்றம், ரெட் ஹில் ரயில்வே கம்பெனி என்று அழைக்கப்படும் முதல் ரயில் பாதை - 1832 ஆம் ஆண்டில் ரெட்ஹில்ஸ் மற்றும் சிந்தாத்ரிபேட் இடையே இயங்கும் ரயில் உட்பட பல முதல் விஷயங்கள் உள்ளன. (இந்தியாவில் முதல் ரயில்வே பம்பாய் மற்றும் தானே இடையே இருந்தது என்று பலர் நம்புகிறார்கள்) மற்றும் பல மேலும் முதல். இந்த நகரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டது.

ஆம், சென்னை நவீன மெட்ராஸ் வயது 381 ஆண்டுகள்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் குமார் நியமனம்

 தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் முடிந்ததும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

"அரசியலமைப்பின் பிரிவு 324 இன் பிரிவு (2) இன் படி, தேர்தல் ஆணையராக ராஜிவ் குமாரை (ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற்றவர்) நியமனம் செய்வதில் ஜனாதிபதி மகிழ்ச்சியடைகிறார்." என்று சட்டத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆகஸ்ட் 31ம் தேதி, லவசா விடைபெற்றதும், அப்பொறுப்பை, ராஜிவ் குமார் ஏற்க உள்ளார் என்று தெரிகிறது. ராஜிவ் குமார் 1984 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும். பி.எஸ்.சி மற்றும் எல்.எல்.பி பட்டம் பெற்றுள்ள ராஜிவ் குமார் முன்னதாக நிதி செயலாளராக பணியாற்றியுள்ளார். கொள்கை வகுத்தல் மற்றும் நிர்வாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் இவராகும்.
 
ராஜிவ் குமார்

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Friday, August 21, 2020

இன்னும் ஒரு வருஷத்துக்கு வீடுதான் கதி - பலருக்கு ஆபீசுக்கு வர மனசே இல்லையாம்!

    
 
 
 வீ ட்டில் இருந்தே வேலை செய்து, ஊரடங்கில் பலருக்கு பழகிப்போய்விட்டது. முதலில் இந்த வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவை ஐடி நிறுவனங்கள்தான். அதன்பிறகு பல்வேறு துறைகளும் இதை கடைப்பிடிக்க தொடங்கி விட்டன. வீட்டில் இருந்து வேலை வசதியாக இருந்தாலும், ஆபீஸ் சூழல் வரவே வராது என்பது தான் நிதர்சனமான உண்மை. 
 
    இருப்பினும், இதுபற்றி மக்களின் மனநிலையை அறிய ஒரு சர்வே நடத்தப்பட்டது. 15 துறைகளை சேர்ந்த 550 நிறுவன ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடந்தது. ஐடி நிறுவனங்கள், ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை, வங்கித்துறை ஆகியவை இதில் அடங்கும். அதில், வீட்டில் இருந்தே வேலை பார்த்து சொகுசு பழகிப்போன பலர், ஸ்கூலுக்கு போக மறுக்கும் குழந்தை மாதிரி அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதாவது, சர்வேயில் 10ல் 3 பேர்தான் ஆபீஸ் போக விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் ‘‘இன்னும் ஒரு வருஷத்துக்கு வீட்டிலேயே இருந்துக்குறோம்’’ என்று கூறியுள்ளனர். 

ஆனால், பல நிறுவனங்கள், இதெல்லாம் சரிப்பட்டு வராது. ரிமோட்ல வேலை பார்க்கிறேன் பேர்வழின்னு, ரிமோட்டும் கையுமா சீரியல் பார்கறதெல்லாம் எங்களுக்கும் தெரியும். வேலைக்கு வரப்பாருங்க என சில நிறுவனங்கள் கெடுபிடி காட்ட துவங்கி விட்டன. இப்போதைக்கு எல்லாரும் வர முடியாதுதான். 30 சதவீதம் பேராவது வர வேண்டும் என்று நிறுவனங்கள் கூறியும், 20 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் ஆபீஸ் வர விரும்புகிறார்களாம். சில நிறுவனங்கள், வேலை நடந்தால் போதும் என்ற எண்ணத்தில் ஊழியர்கள் விருப்பத்துக்கே விட்டு விட்டன.

* வீட்டில் இருக்க விருப்பம் : 
    ஐடி நிறுவனங்கள் ஆலோசனை நிறுவனங்கள் வங்கி துறை காப்பீட்டு துறை
* வேலைக்கு வர விருப்பம் : 
    ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்து தொழில்நுட்பத்துறை உற்பத்தி துறை
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

“விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாகும்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு மாநில அரசின் உரிமையையும், தன்னாட்சியையும் பறிப்பதாகும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதையே குறியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி குழுமத்திற்கு அரசு நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு வருவதற்கு அரசியல் கட்சிகள், சமூக நல ஆர்வலர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் என பலரும் கடுமையாக கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்துள்ளது மோடி அரசின் அமைச்சரவை. கொரோனா தடுப்பு பணிக்களை மேற்கொள்ளாமல், இதுபோல நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், மோடி அரசு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசின் உரிமையையும், தன்னாட்சியையும் பறிப்பதாகும்.

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003-ம் ஆண்டு அளித்த உறுதிமொழியை இது மீறுகிறது. எனவே இம்முடிவைத் ரத்து செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் முன்னதாக மத்திய அரசின் முடிவை முடிவை எதிர்த்தும், மறுபரிசீலனை செய்யுமாறும் பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “2003ம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தை மீறி திருவனந்தபுர விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு விடுவது முறையற்றது.

மாநில அரசின் வாதங்களை கருத்தில் கொள்ளாமல் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது ஒருதலைபட்சமானது. இதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு நல்காது. திருவனந்தபுர விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இந்த முடிவு மாநில மக்களின் விருப்பதிற்கு எதிராக உள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழுமத்துக்கு திருவனந்தபுர விமான நிலையத்தை ஒப்படைக்கும் முடிவை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “2003ம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தை மீறி திருவனந்தபுர விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு விடுவது முறையற்றது. மாநில அரசின் வாதங்களை கருத்தில் கொள்ளாமல் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது ஒருதலைபட்சமானது. இதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு நல்காது.

திருவனந்தபுர விமான நிலையத்தின் முக்கிய பங்குதாரராக மாநில அரசு. ஏற்கெனவே கொச்சி, கண்ணூர் ஆகிய விமான நிலையங்களை மாநில அரசு சிறப்பாக நிர்வகித்து வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி இருக்கையில் திருவனந்தபுர விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த முடிவு மாநில மக்களின் விருப்பதிற்கு எதிராக உள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 47 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 47 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்து மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

கேல் ரத்னா விருது, துரோணாச்சாரியா, அர்ஜூனா விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு!

 தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட 5 பேருக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது. 

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் போன்ற விருதுகள் வழங்கப்படும்.

அதன்படி இந்தாண்டு விருது வாங்குவோர் பட்டியலில் 500க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் மற்றும் கேல் ரத்னா விருது பெறுவோரின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்திய விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்த விருது பெறுவோரில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், இந்திய கிரிகெட் அணியின் வீரர் ரோஹித் ஷர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீரர் விக்னேஷ் போகத் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சாரியா விருது 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையின் பல்வேறு பிரிவுகளில் 27 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தயான் சந்த் விருதும் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29-ல் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்க உள்ளார்.

விருதுகள்
 

விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம்

 

விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம்

காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

விநாயகர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உகந்த நேரம்

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

அலுவலகத்தில் பூஜை செய்ய உகந்த நேரம்

காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

அன்றைய தினம்

சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு
இராகு காலம்: 9.00 - 10.30
எமகண்டம்:  1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30

சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயக பெருமானுக்கு சத்துமாவு விசேஷம். இனிப்பு மற்றும் கார மோதகம் செய்வது விசேஷம்.

மேலும், ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்திற்குக் கொப்பரை கொடுப்பதும் மற்றும் சத்துமாவு கொடுப்பதும் சிறப்பு.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

அஇஅதிமுக சார்பில், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

 அஇஅதிமுக சார்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல விநாயகப் பெருமானை வணங்கினால், நல்ல சொல் வளம், பொருள் வளம், மன வளம், உடல் நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும் என தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் இல்லங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். விநாயகப் பெருமானின் அருளால், நாடெங்கும், நலமும், வளமும் பெருகவும், இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்" என அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 
 
 
 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

திருப்பத்தூர் கிளைச் சிறையில் சிறைக் காவலர் உட்பட 21 பேருக்கு கொரோனா!. சிறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் -21
    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில் சுமார் 40-பேர் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலர் ஜாமினில் வெளியே சென்றுள்ளனர். சிறையில் தற்போது 29 சிறைக் கைதிகள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் ஒருவர் சிறைக்கு வந்துள்ளார். அவருக்கு கடந்த 19ம் தேதி நோய்த் தொற்றானது உறுதியாகி உள்ளது, அதேபோன்று கடந்த 5 நாட்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சென்னையைச்  சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 5 பேர் சிறைக்கு சென்று உள்ளனர். சென்னை வாசி என்று தெரிந்தும் அவர்களை தனிமை படுத்தாமல் சிறைக்கைதிகள் உடன் ஒன்றாக அடைத்துள்ளனர். இதனால் மற்ற சிறைக் கைதிகளுக்கும் நோய்த் தொற்றானது பரவியுள்ளது. அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர் ஒருவருக்கு ஒருவர் நோய்த் தொற்றானது பரவியுள்ளது. 

    இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஐந்து சிறைக்கைதிகள் பரோலில் வெளியே சென்றது தெரியவந்துள்ளது. அவர்களுக்கும் நோய்த் தொற்றானது உறுதியாகியுள்ளது. கிளைச் சிறை அதிகாரி சையது அமீர் என்பவரின் மெத்தன போக்கால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இன்று மாலை 4 மணியளவில் நான்கு நபர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். 10 நபர்கள் அகரம் சித்தா மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிறையில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். 

 
 


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

சொத்துக்காக கொலை?. உடலை தோண்டி எடுக்க தாசில்தாரிடம் மனு!. திருப்பத்தூரில் பரபரப்பு!.

   

 திருப்பத்தூர்-21.

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ரவிக்குமார் இவரது சகோதரர் ராஜேந்திரன் (59) என்பவர் நெய்வேலியில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். பணிச்சுமை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி சேலம் நெத்திமேடு அகரம் திருமண மண்டபம் அருகில் உள்ள வைபவ் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்துள்ளார். 

     இதுகுறித்து திருப்பத்தூரில் உள்ள அவரது உறவினர்களிடம் மாரடைப்பு காரணமாக உங்களது சகோதரர் மரணம் அடைந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதனை அறிந்து சேலத்தில் இருந்து அவரது சொந்த ஊரான திருப்பத்தூரில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து திருப்பத்தூரில் அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மனைவி சாந்தி (42) என்பவர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சொத்து மற்றும் பணத்திற்காக கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து சரவணன், சந்துரு, சாந்தி ஆகியோர் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக வினோத் ராஜ் என்பவர் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். 

    புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் சரவணன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இதுகுறித்து திருப்பத்தூர் தாசில்தாரிடம் உடலைத் தோண்டி உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளார். பின்னர் அவரது சகோதரர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது சகோதரர் சொந்த ஊரான திருப்பத்தூரில் செட்டில் ஆகப் போவதாக அவரது மனைவியிடம் கூறியுள்ளார். அதனால் சொத்துக்கள் நமக்கு கிடைக்காது என்ற எண்ணத்தில் அவரை ஊருக்கு அனுப்பி வைத்தால் நமக்கு தான் ஆபத்து என்று ஆரோக்கியமாக இருந்த அவரை மர்மமான முறையில் கொலை செய்திருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. இதனால் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS