திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூரில் மகளிர் திட்டம் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர்-மார்ச்-17.
திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பாக அப்பகுதி மகளிர் சுயஉதவி குழுவினரை ஒன்றிணைத்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்சியில் மகளிர் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, துணை திட்ட அலுவலர் கலைச்செல்வன், மண்டல துணை வட்டார் வளர்ச்சி அலுவலர் கவிதா, ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் மகளிர் குழுவினர், ஊராட்சி பணியாளர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மகளிர் சுய குழு பெண்கள் கோலாட்டம் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுய உதவி குழு பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.