கொஞ்சம் சிரிங்க பாஸ் ! 😀 😀 😀

கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?

மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்

கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ. 

என்னதான் `Google' பெரிய வெப்சைட்டா இருந்தாலும்.

சொப்ன சுந்தரி"யை யாரு வச்சிருந்தாங்கன்னு கண்டுபிடிச்சி சொல்ல முடியுமா ?

டெக்னாலாஜி இன்னும் ரொம்ப வளரனுமங்க ! 

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா? 

மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான். 

நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

அதைத்தான் சொல்லிட்டான்...! 

மனைவி: ஹூம்...உங்களுக்கு என் மேல பிரியமே இல்ல.....

கணவன்: அதுசரி....அப்ப நம்ம புள்ளைங்க ரெண்டையும் நான் கூகுள்ல இருந்தா டவுண்லோட் பண்ணுனேன்.....? 

விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

ராக்கெட் சொன்னது அழகிய குரலில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ...... 

'மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு
உண்டா?'' 

''அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!'' 

"டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"

"ஏன் என்னாச்சு?" 

"அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!" 

"எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!" 

"அப்படியா? அப்போ எனக்கு 2 மீட்டர் வேணும்னா எப்படி கிழிச்சு குடுப்பீங்க?" 

"நான் வனஜாவை லவ் பண்ற விஷயத்தை ஊர்ல இருக்கற எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்" 

"அப்புறம் ஏன் சோகமா இருக்கே?" 

"இன்னும் வனஜாகிட்டே சொல்லலையே?" 

கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா? 

மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க.. 

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம். 

நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க? 

நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான். 

"கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்." "அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு." 

அண்ணன்: ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிட்டாய்? தம்பி: டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார். 

"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!"
"நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்." 

"என்னப்பா காபியில 'ஈ' செத்துக்கிடக்குது...?" "ஸ்பெஷல் காபியிலதான் சார் 'ஈ' உயிரோட இருக்கும்" 

எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு
தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்

அப்புறம்?

நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்…! 

"பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும் பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு பைத்தியம்னு பொண்ணு கொடுக்க மாட்டேனுட்டாங்க." "அவன் அப்படி என்ன சொன்னான்?"
"நான் கொஞ்சம் தனியா பேசணும். பரவாயில்லையா?"னு சொன்னான்.

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு தூக்கிட்டீங்க? 
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க 'டிபன் ரெடியா?'ன்னு கேட்டா 'நேத்தே ரெடி'ங்கறான்! 

"அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது, ஏன்?" "ஏன்?"
"அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்.." 

"நீங்கள் எப்போதும் என்ன சோப் உபயோகிக்கிறீங்க?" "நான் எப்போதும் சோப் உபயோகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்" 

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.. 
பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்.... 


மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான். 

நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

அதைத்தான் சொல்லிட்டான்...! 

அமெரிக்க நகர் ஒன்றில், ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. 

இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் வ்னிங் சார்..'அவர் 'குட் வ்னிங், 

ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். 

ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், 

ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், 

சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.

அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, 

உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. 

அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். 

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..' 

செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!"

"என்னாச்சு?" 

"பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க" 

"செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?" 

"சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!" 

சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

எடுக்கறவங்க அழுதா அது சினிமா. பாக்கறவங்க அழுதா அது சீரியல் 

இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை?

பத்து ரூபா.

லூசுன்னா எவ்ளோ?

எல்லாருக்கும் ஒரே விலை தான்பா. 

"மகனிடம் தந்தை, யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியாதை குறைவா பேசக்கூடாது?" 

"சரி, டா டி" 

உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் 'குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே...எதுக்கு? 

ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார். 

"நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்." 

"என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?"
"அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!" 

தமிழ் ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க? 
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்...... 

"என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!"
"பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?" 

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்.. 
மாணவன்: டேய் மச்சான், 'figure' டா! 

ஒருவர்: சாமி... உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க...?
சாமியார்: பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான். 

டாக்டர்: நான்தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்! 
நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க? 

சென்னை ஹோட்டலில்.. "மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது... இன்னும் வரலையே...?" "மதுரை என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கெண்டு வர.." 

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..
...
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்.. ..... :P 

"தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!" 
"சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவிதான் விட்டேன்...!"
மனிதன் 1 :உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
மனிதன் 2 :ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது. 

"நான் பாடம் நடத்தும்போது அவன் ஏன்டா வெளியில போறான்...?"

 "அவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு சார்...!" 

மகன் : கஞ்சன் அப்படின்னா என்னப்பா?

தந்தை : கண்ணிலே காசையே காட்டாதவந்தாண்டா கஞ்சன்

மகன் : காசுன்னா என்னப்பா???!!!! 

"சுவாமி! நீங்கள் திருமணமான பின் தான் துறவி ஆனீர்களா?"
"சீடனே! எப்படிக் கண்டுபிடித்தாய்?"
"உடம்பெல்லாம் காயம்பட்ட தழும்புகள் நிறையத் தெரியுதே!" 

ஆசிரியர்:இது யாரோட கையெழுத்து?"/\/\/\/\/\/\/\"
பையன:என் அப்பாவோட கையெழுத்து ?
ஆசிரியர் :உன் அப்பா பெயர் என்ன ?
பையன் :ஏழுமலை.. 

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே."
"நான் என்ன சாதிச்சேன்?"
"பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே 

"அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே 'தண்ணி' அடிக்கிறியா?"
"நான் உனக்குப் பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீதான் படார்னு திரும்பிட்ட!" 

Man 1:எதுக்குடா அவன அடிச்சே”

man2:“ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு
சொன்னான்”

... Man1:“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?”

Man2:“நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்!”.

Man1:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!????????? 

அவன்: என்னது, இன்னிக்கு வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக் கிட்டே தைரியமா எதிர்த்துப் பேசப்போறியா? எப்ப இருந்துடா இப்படி மாறினே. 
இவன்: காலையில நான் துடப்பத்தை ஒளிச்சி வெச்சதிலிருந்து. 

ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய்ப்பாத்தியா?
பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம் 

போலீஸ் : உனக்கு நாளை காலை 5 மணிக்கு தூக்கு தண்டனை
கைதி : ஹ ஹ ஹ
போலீஸ் : ஏன் சிரிக்கிற.?
கைதி : ஐயோ ஐயோ நான் என்திரிகிறதே 8 மணிக்கு தான்.! 

"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?"
"ஆமா.. ஏன் கேட்கிறீங்க?"
"என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!" 

நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
அதிசயமாயிருக்கே!
காரணம். அவன்தான் அவ புருஷன். 

டார்லிங்! நம்ம மேரேஜ் இப்ப வேணாம். ஆடி போய் ஆவணி வந்தா…நான் ‘டாப்’பா வந்துருவேன்!

ம்ஹூம்..அதுக்குள்ளே நமக்கு ‘பாப்பா’ வந்திடும் டியர்…! 

இன்ஸ்பெக்டர் இண்டர்நெட் பைத்தியம் போல..
-
எதை வெச்சு சொல்றே?
-
கொலைகாரனை கூகுள் சர்ச்-ல போய்த் தேடுறாரே..!  

வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும்? கூட்டினால் என்ன வரும்? 

மாணவன்: குப்பை தான் சார். 

"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"
"இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!" 

ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..................
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே ...........
தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?

ஏன் ?

அதைச் சுடுகிறார்கள் 

டாக்டர், பயங்கர முதுகுவலி... என்ன பண்ணலாம்...?தைலம் அப்ளை பண்ணுங்க...

அப்படியும் வலி போகலேன்னா...?

லீவுக்கு அப்ளை பண்ணுங்க. 

திருடன்: மரியாதையா பீரோ சாவியைக் கொடு...இல்லத்தரசன்: இதையேதாம்ப்பா நான் கல்யாணம் ஆனதுலேர்ந்து என் வீட்டுக்காரிகிட்டே கேட்டுக்கிட்டிருக்கேன் 

நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் அப்புறம் ?
களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. 
சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்...========= 

என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்========== 

டாக்டர்... உங்களைக் கைராசி இல்லாதவர்னு வெளில பேசிக்கிறாங்களே... உண்மையா...?

ஏன் கேட்கறீங்க ?

என் மாமியாரை உங்ககிட்டே அட்மிட் பண்ணலாம்னு இருக்கேன் 

அவருக்கு மறதி அதிகமாயிடுச்சுனு எப்படிச் சொல்றே ?கதவில் சாவியை மாட்டிட்டு பூட்டை எடுத்துட்டுப் போறாரே! 

டாக்டர்;தினமும் ஒரு வேலை கஞ்சி தான் குடிக்க வேண்டும்.
நோயாளி:எத்தனை நாளைக்கு டாக்டர்?
டாக்டர்:என்னிடம் செய்து கொள்ளும் வைத்தியத்திற்கு பணம் கொடுக்கும் வரை.
நோயாளி:கஞ்சி சாப்பிடுவதற்கும்,பில் தொகை  கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்,டாக்டர்?
டாக்டர்:அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்? 

உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?

அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு 

யோவ், யாருய்யா ஆபரேஷன் தியேட்டர் வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது ? 

டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?

அதனாலே என்ன ?

மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ? 

. எல்லா மெகா சீரியல்-களிலேயும் பழைய நடிக, நடிகைகளையே போடறாங்களே. .. ஏன் ?

அவங்கதான் இப்ப மெகா சைஸ்ல இருக்காங்க 

தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?

கை நாட்டு வைக்கதான். 

அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?

அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?

ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாராம்னு சொல்றாரே? 

கணவன்: ஆபிரேஷன்ல நான் இறந்து போயிட்டா... 
நீ அந்த டாக்டரையே 
கல்யாணம் பண்ணிக்கோ

மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?

கணவன்: பின்னே... டாக்டரை நான் 
எப்படிப் பழிவாங்குறது? 

‎"திடீர்னு என் மாமியாருக்கு 
வலிப்பு வந்துடுச்சு.."

"உடனே சாவிக்கொத்தைக் கையில
கொடுத்துட்டியா?"

"அவ்வளவு மடச்சியா நான்..
சூடா இருந்த இரும்புக் கரண்டியைக்
கொடுத்துட்டேன்" 

நம்ம அப்பா முட்டாளாம்மா?"

"எதுக்குடா இப்படி கேகிறே?"

"எங்க வாத்தியார் என்னை 
முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே" 

ஓவராக சரக்கடித்துவிட்டு போதையில், வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தவன் சொன்னான்.. 
"ஆல் இஸ் வெல்" ! 

கடவுள்: பக்தா, நீ வேண்டும் இரண்டு வரம் கேள்!

மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயும் என் மனைவிக்கு நல்ல கணவன் அமையணும்

கடவுள்: சரி, தந்தோம். இன்னொன்று?

மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயாவது எனக்கு நல்ல மனைவி அமையணும் 

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!! 

‎"'படிதாண்டா பத்தினி'னு அவர் சொன்னப்ப எனக்கு மொதல்ல புரியலை."

"அப்பறம்?"

"தெனமும் வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கி வாசல் படிதாண்டா கதின்னு கிடப்பார்ன்னு போய்ப் பார்த்தப்பதான் புரிஞ்சது" 

உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட ஒரு பொண்ணு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம்.

ஐயையோ... அப்புறம்...?

உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்க

நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.

ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?

நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு 

மனைவி :  "எதிர்த்த வீட்டுக்காரரு அவரோட மனைவிக்கு தினமும் ஒரு புடவை வாங்கித் தரார். நீங்களும் இருக்கீங்களே" 

அவர்:  "எனக்கும் வாங்கிக் குடுக்கலாம்னு ஆசைதான். ஆனா அவங்க வாங்கிக்குவாங்களோ மாட்டாங்களோன்னுதான் பயமாயிருக்கு"  

ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு

நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ? 

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.


அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே 

தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?

என்ன செய்வாங்க ?

முழிச்சிருப்பாங்க===== 

டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை

டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை 

திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா! 

டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?

உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க 

தலைவருக்கு, எதுஎதுக்குத்தான் ஜோசியம் பார்க்குறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு...

என்னாச்சு ?

வருகிற தேர்தலில் தனக்கு எத்தனை கள்ள ஒட்டு விழும்ன்னு கேட்குறாரே========== 

 ஐய்யா சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. .
ஒரு அஞ்சு நிமிஷம் இரு... இப்ப நான் சாப்பிடப் போறேன்... பார்த்துட்டுப் போய்டு 

''நாய் பற்றிய கட்டுரை எழுதி வரச் சொன்னால்,நீயும் உன் அண்ணனும் ஒரே மாதிரி எழுதி வந்திருக்கிறீர்களே?''
என்று ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்.
அவன் சொன்னான்,''எங்கள் வீட்டில் ஒரு நாய் தானே சார் இருக்குது.'' 

''வெங்காய வேனும் பெருங்காய வேனும் மோதினதில் வெங்காய வேன் வெங்கையாவுக்கு பெருங்காயம்!'' 

. ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?

புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம். 

டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.

வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க. 

ஐயா இல்லீங்களா...? தீபாவளி இனாம் வேணும்!

ஐயாவும் தீபாவளி இனாம் வாங்கத்தான் அடுத்த தெருவுக்குப் போயிருக்காரு. 

மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒண்ணுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொண்ணுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல - குட்டி போடும்.

கடைசி யானைதான்

தப்பு. எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும். 

அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்...

ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க. 

டாக் டர்...............(தன்னிடம் வந்த நோயாளியைப் பார்த்து)........... நீங்கள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக என்னிடம் கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு என்ன வருத்தம் என கூற முடியும்.

நோயாளி.........."ஆமா டாக் ட ர். நான் ரொம்ப நாளா உங்க Secretary  கமலாவைக் காதலிக்கிறேன்." 

டாக் ட ர்.............????????????????????? 

நம்ம கணக்கு வாத்தியாருக்கு 
அறிவே இல்லடி?"

"எத வச்சு சொல்றே?"

"அவரோட நாலாவது பொண்ணுக்கு 
�அஞ்சு� ன்னு பேரு வச்சிருக்காரே" 

போருக்குப் போகும்போது கிரீடம், வாள் உறை, 
மார்புக்கவசம் எதுவும் வேணாங்கறீங்களே... ஏன் மன்னா?"

"நாப்பது அம்பது கிலோவை சுமந்துக்கிட்டு
எப்படிய்யா வேகமா ஓடி வர முடியும்?" 

மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.

கணவன்:- 
இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன் 

நீதிபதி : 
"வாடகைக்கு குடியிருந்த வீட்டை
எதற்கு இடித்தாய்?"

குற்றவாளி:
"வீட்டு ஓனர்தான் விடியுறதுக்குள்ள
வீட்டைக் `காலி`பண்ணுனு சொன்னார்
யுவர் ஆனர்" 

திருடனைக் கண்டதும் பாகவதர் 
கூச்சல் போட்டிருக்காரே...
அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க 
ஒருத்தரும் எட்டிப்பார்க்கவே
இல்லையாமே, ஏன்?"

"கச்சேரிக்காக பிராக்டீஸ்
செய்யறார்னு நெனைச்சுட்டாங்களாம்" 

மனைவி:"ஏன் இப்படி பேயடிச்சமாதிரி
இருக்கிறீங்க?"
கணவன்:"கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே
அடித்தாய்" 

‎"ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..."

"எது?"

"நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது...!" 

என் மனைவி நான் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஒடி வந்துடுவாஇப்ப எங்க இருக்காங்க ?

குளிச்சுகிட்டு இருக்காகூப்பிடுங்களேன் பார்ப்போம் 

சின்ன ஆபரேஷன்தான்... பயப்பட வேண்டாம்

.டாக்டர் பெரிய ஆபரேஷன்னு சொன்னாரே...?

டாக்டருக்கு இது பெரிய ஆபரேஷன்! 

 அந்த டாக்டர் பேஷண்ட்டுகிட்டே நைஸh பேசி, ஐஸ் வெச்சு ஆபரேஷனுக்கு முன்னாடி ஃபீஸை வாங்கிடுவாரு!

ஏன் அப்படி..?

ஆபரேஷனுக்கு அப்புறம்னா, அவரால ஐஸ் மட்டும்தான் வைக்க முடியும்... ஃபீஸை வாங்க முடியாதே 

 கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?என்ன வித்தியாசம் ?

மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது 

எங்க மானேஜருக்கு ஆபீஸ்ல திடீர்னு பெண்டாட்டி ஞாபகம் வந்தா போதும்.. .

உடனே வீட்டுக்கு கிளம்பிடு வாரா.. .?

இல்ல ஆபீஸ்ல எல்லார் மேலயும் எரிஞ்சு விழுவாரு 

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு 

ஏன் ?

நர்ஸிங் ஹோம் வெச்சுத்தரச் சொல்லி பிடிவாதம் பண்றாரு.
சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.

"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"

"அது வேறு யாரும் இல்லைங்க! கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது!" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!


No comments:

Post a Comment