Thursday, January 19, 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

 திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

 

        திருப்பத்தூர்:ஜன-19, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளவள்ளி  கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த பகுதியினைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இம் முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நெற்பயிரில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி, தென்னங்கன்று நடவு ஆகியவற்றை வேளாண் அலுவலர்கள் விளக்கி பேசினர். அதோடு தொழில்நுட்பம் சார்ந்த உழவன் செயலியினை வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவ மாணவர்களுடன் இணைந்து செயல் விளக்கம் அளித்தனர். அதோடு விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும், விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருள் மற்றும் பயிர் வகைகள் குறித்த சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினர். வேளாண்மைத் துறை மட்டும்  என்றில்லாமல் கால்நடை துறையும் இணைந்து   கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறையில் கருவூட்டல் மற்றும் விவசாயிகளின் கால்நடைகளுக்கு நேரடியாக சென்று சினை பரிசோதனை மற்றும் கால்நடை சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கும் கால்நடை மருத்துவர்  சத்யா விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி  தலைவர் செல்வம்பாள்  சரவணன், ஊராட்சி செயலாளர் தமிழ்வாணன், கிராம நிர்வாக அலுவலர் நந்தன், வேளாண் துறை அலுவலர் ஸ்வஸ்திகா, சந்தன முல்லை, அனுப்பிரியா, உதவி வேளாண் அலுவலர் அஜித்குமார், பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற 150  குடும்பங்களுக்கு 300  மரக்கன்றுகளை வேளாண்மை துறை சார்பில் வழங்கினர்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS