Wednesday, September 9, 2020

திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து திருட்டு. 11 பேர் கொண்ட கும்பல் கைது.

 திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து திருட்டு. 11 பேர் கொண்ட கும்பல் கைது.





30 செல்போன் மற்றும் 1 லட்சம் பணம் பறிமுதல். 

திருப்பத்தூர் டார்லிங் டிவி ஷோ ரூமில் கடந்த 3.9.2020 அன்று நள்ளிரவு கடையின் ஷட்டரை உடைத்து லேப்டாப், மொபைல்கள் மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் இவ்வழக்கில் சதீஷ், மாதேஷ், ராகவேந்திரன், வீரமணி, விஷ்வா, விக்ரம், சுதாகர், குணா, வில்வநாதன், கோவிந்தராஜ், நித்தியானந்தம் உள்ளிட்ட 11 நபர்களை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் இவ்வழக்கில் வேறு எவருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது காவல்துறை. 

மேலும் இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

சுமார் 10 லட்சம் அளவில் கொள்ளை அடித்து இருப்பதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

இதில் கோவிந்தராஜ், நித்தியானந்தம் ஆகிய இருவரும் செய்தியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். 


மேலும் குற்றவாளிகளிடம் இருந்து ஒரு லட்சம் பணமும் 30 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி விவரம் தெரிந்தால் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவி எண் 9442992526 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.