Friday, August 7, 2020

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

 திருப்பத்தூர் -7,

      திருப்பத்தூர் ஒன்றிய திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அநல்லதம்பி அவர்கள், செம்மொழிநாயகர்  கலைஞர்  திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

சித்தா மருத்துவமனை சிறப்பு முகாமில் ஏஜிஎஸ் மால் சார்பாக ட்ராலி வழங்கியது.

 

திருப்பத்தூர் -7,

 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அமைந்துள்ள covid-19 சித்தா மருத்துவமனை சிறப்பு முகாமில்  திருப்பத்தூர்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஏஜிஎஸ்  மால் சார்பாக ட்ராலி மற்றும்  கடலைமிட்டாயும் வழங்கப்பட்டது.
    திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர்  செந்தில்முருகன்,  திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வீடியோ சங்கத்தின் தொழில் நுட்ப பிரிவு அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.  



FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

குறுஞ்செய்திகள்-50

  1. தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல். "காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை" 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என தகவல்

  2. கடந்த 31ஆம் தேதி ஆம்பூர் பேட்டை பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோவிலில் கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இளைஞர்களின் முயற்சியாலும் வாணியம்பாடி காவல்துறையின் துரித நடவடிக்கை ஆளும் இன்று மீட்கப்பட்டுள்ளது.

  3.  வாணியம்பாடி டிஎஸ்பி அதிரடி மாற்றம் புதிய டிஎஸ்பியாக பழனிசெல்வம் நியமனம்.

  4. இலங்கை அதிபரானார் மஹிந்த ராஜபக்ஷே - பிரதமர் மோடி வாழ்த்து.
     

  5. சரயு நதிக்கரையில் ஒரு வரலாறு உருவாக்கப்படுள்ளது. - பிரதமர் மோடி.

  6.  தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தொடரும்- தமிழக முதல்வர் உறுதி.

  7. ஜம்மு-காஷ்மீர் புதிய கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம். 

  8. இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடு தலையிட கூடாது: வெங்கையா நாயுடு.

  9. கொரோனா அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு.

  10. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி.

  11. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 976 உயர்ந்து 42,592 ரூபாய்க்கு விற்பனை.

  12. மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  13. தமிழகத்தில் இன்று புதியதாக 5684 பேருக்கு கொரோனா தொற்று. 110 பேர் இறப்பு.

  14. மக்கள் ஒத்துழைப்பால் பரவல் குறைகிறது - தமிழக முதல்வர் 

  15. சென்னையில் அம்மோனியம் நைட்ரைட்  உள்ளது.- சுங்கத்துறை.

  16. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 9ஆம் தேதி உருவாகிறது.

  17. துப்பாக்கி சூடு விவகாரம் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன். 

  18. ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும். ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

  19. நீலகிரியில் அதிக மழைக்கு வாய்ப்பு. - வானிலை தகவல் மையம் அறிவிப்பு. 

  20. சீனாவுடன் தொடர்புடைய 2500 யூடுயூப் சேனல்களை கூகிள் நீக்கியது. 

  21. ஊழலுக்கு வழி வகுக்கும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.  ஸ்டாலின் வலியுறுத்தல். 

  22. மும்பையில் வரலாறு காணாத மழை. 

  23. மக்களின் கருத்துக்கு பின் பள்ளிகளை திறக்க முடிவு - அமைச்சர் 

  24. விநாயகர் சிலைக்கு அனுமதி வேண்டும் என அரசிடம் வலியுறுத்தல். 

  25. லெபனான் வெடி விபத்து. பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு. 

  26. பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் நலமாக இருக்கிறார். MGM மருத்துவமனை அறிவிப்பு. 

  27. ராமர்கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டன் மக்கள் அதிகம் பார்த்தனர். 

  28. டில்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவிற்கு தயாராகி கொண்டிருக்கிறது. 

  29. தேசிய கல்வி கொள்கை மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார். 

  30. 6272 பேர் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 

  31. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 4 கோடி நிதி உதவி. 

  32. பாடப்புத்தகம் வழங்கும் போது சமூக இடைவெளி தவறாமல் பின்பற்றவேண்டும். கல்வித்துறை எச்சரிக்கை. 

  33. சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை துவக்கியது சி. பி. ஐ. 

  34. மத்திய தணிக்கை குழு தலைவராக ஜி. சி. முர்மு நியமனம். 

  35. கேரள முதல்வர் அலுவலகத்தில் தங்கம் கடத்தல் ஸ்வப்னாவுக்கு தொடர்பு. என். ஐ. ஏ. 

  36. கொரோனா தொற்று கட்டுக்குள் வருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்- தமிழக முதல்வர். 

  37. தென் தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது-முதல்வர். 

  38. திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் 40வது வீர வணக்க நாள் நடைபெற்றது. 

  39. திருப்பத்தூர் அருகே மொபைல் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை. 

  40. மதுக்கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதும் இல்லை -மதுரை உயர் நீதிமன்றம். 

  41. 6 எம் எல் ஏ க்கள் இணைப்பு. இடைக்கால தடை விதிக்க ராஜஸ்தான் கோர்ட் மறுப்பு. 

  42. ''கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்கு காணிக்கை செலுத்துவோம்!'' திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மடல். 

  43. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு செயல்படுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை. 

  44. கலைஞரின் கடைசி யுத்தம் நூலை வெளியிட்டார் மு. க. ஸ்டாலின். 

  45. ''கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் மாரத்தான் 2020'' ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

  46. பெரம்பலூரில் சித்தா சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம். 

  47. அரசு பள்ளியில் படித்த மாணவி சரண்யா ஐ. ஏ. எஸ். தேர்வில் முதலிடம். 

  48. வங்கியில்  நகை மதிப்பில் 90% கடன் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி அறிவிப்பு. 

  49. திருப்பத்தூர் மாணவி யாமினி UPSC தேர்வில் வெற்றி. 

  50. பொறியியல் படிப்பிற்கான கல்வி கட்டணத்தை உயர்த்த தனியார் கல்லூரிகள் கோரிக்கை. 

 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

ஏலகிரி மலைப்பாதை நடுவே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

 

திருப்பத்தூர் -6.

    ஏலகிரிமலையில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரெனச் சூறைக்காற்று வீசியது. இதனால் ஏலகிரிமலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த தைலமரம் ஒன்று மலைப்பாதையின் நடுவே முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள்கள், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
    மரம் விழுந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனமும், மக்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அத்துடன் ஏலகிரி மலையில் இருந்து அடிவாரம் பகுதியான சின்னபொன்னேரிக்கும், அங்கிருந்து ஏலகிரி மலை கிராமங்களுக்கும் செல்ல முடியாமல் மலைப்பாதையில் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் முறிந்து விழுந்த தைல மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து மலைப்பாதையில் போக்குவரத்துச் சீரானது.
 

 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Thursday, August 6, 2020

நக்சலைட்டுகளின் குண்டு வீச்சில் வீரமரணமடைந்த காவலர்களின் மகத்தான சேவையும், தியாகத்தையும் நினைவுகூறும் வகையில் 40 வது வீரவணக்க நினைவு நாள்.

 

திருப்பத்தூர் - 6, 

    திருப்பத்தூர் அருகே கடந்த 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நக்சலைட்டுகள் தாக்குதலில் 4 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

    இன்று 40வது நினைவஞ்சலி வீர வணக்கநாள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வணிக வரி  பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி., திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள், வேலூர் மண்டலா துணைத் தலைவர் என்.காமினி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.மயில்வாகணன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கியூ பிரான்ச் காவல் கண்காணிப்பாளர் ஜே.மகேஷ், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர். எம்.அசோக்குமார் ஆகியோர் உயிர் தியாகம் செய்த 4 காவலர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து பின்னர் 21  முழங்க மரியாதை செலுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தினர். 

 
 
 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

உயிரை பறித்த பப்ஜி விளையாட்டு மோகம் -பள்ளி மாணவன் துக்கிட்டு தற்கொலை போலிசார் விசாரணை

திருப்பத்தூர்-6,

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் தினேஷ்குமார் (15)  மிட்டூர் அரசு பள்ளியில் 9 வகுப்பு முடித்துவிட்டு 10 வகுப்பு சென்ற நிலையில் பள்ளிக்கு சென்று இலவச பாடபுத்தகம் வாங்கி வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த  சில மாதங்களாக பள்ளி சிறுவர்கள் வீட்டில் இருந்த நிலையில் வந்தால் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர்.

 இதனை கண்ட தினேஷ்குமார் தனது பெற்றோர்களிடம் தனக்கும் செல் போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளான் விவசாய கூலித்தொழிலாளியான பெற்றோர்களால்  செல்போன் வாங்கி தரமுடியாத நிலை இருத்துள்ளது இந்த நிலையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சக நண்பர்களிடம் அமர்ந்து கண்டு  ரசித்ததோடு விளையாடவும் ஆசைபட்டு நண்பர்களிடம் செல்போன் கேட்டதாக தெரிகிறது.

தினேஷ்குமார் விளையாட யாரும் செல்போன் தராததால் தான் பப்ஜி விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் வீட்டுற்க்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் அவசர அசரமாக தனது தாயின் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளான்.

இது குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த குரிசிலாப்பட்டு போலிசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

BREAKING NEWS


இலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், 70 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.



கொரோனாவால் பாதிக்ப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது


ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி மையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி


சினிமா படப்பிடிப்புகளுக்கு தற்போது அனுமதி இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு


இ-பாஸ் முறையை ரத்து செய்யவேண்டும் - வாடகை வாகனங்களுக்கு சாலை வரியை ரத்துசெய்யவேண்டும். வாடகை வாகன உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19 இலட்சத்தை கடந்தது.


ராமர் கோவிலுக்கு அடிகள் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் வாழ்த்து .


தங்கத்தின் விலை உயர்வால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது



FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு .


சென்னை-6,

    பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், உயர் கல்வி துறையின் கீழ், 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றிலும், தொழில் வணிகத்துறை மற்றும் தொழில்நுட்ப கல்வி துறையின், கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய, மூன்று இணைப்பு கல்லுாரிகளிலும், முதலாம் ஆண்டு, டிப்ளமோ படிப்பு சேர்க்கைக்கான, இணையதள விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கியது. இதுவரை, 16 ஆயிரத்து, 940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நேற்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, டிப்ளமா படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, வரும், 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பதிவேற்றத்தை, ஆகஸ்ட், 10 முதல், 20ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


FOLLOW US OUR SOCIAL MEDIAS