திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பஞ்சாயத்தில் செல்வ ராயன் ஏரி வட்டம் பகுதியில் அதிகமான பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இந்தப் பன்றிகளை வளர்ப்பவர்கள் இதைப் பற்றி பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இவ்வாறு விளைச்சல் பயிர்களை அளித்து வளரும் பன்றிகளை இறைச்சி விற்பனைக்காக தேவைப்படும் போது மட்டுமே பிடித்து செல்கின்றனர்.
இதற்கு துறை சார்ந்த நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும். பன்றிகளை வளர்ப்பவர்கள் அவர்களது இடத்திலேயே பட்டி அமைத்து வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் குடிநீர் தொட்டி உள்ளது. அங்கு ஆதியூர் சுற்றிலும் பல்வேறு பகுதியில் இருந்து குடிநீர் பிடித்து செல்ல தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் தற்போது சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் அங்கு குடியிருப்பவர்கள், குடிநீர் தேவைக்கு வந்து செல்பவர்களும் மிகவும் அபாயகரமான பயணத்தை செய்ய வேண்டியுள்ளது. எனவே சாலையை ஊராட்சி நிர்வாகம் சீர்செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.