Wednesday, October 7, 2020

ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் இணை இயக்குநர்(தடுப்பூசிகள்) திடீர் ஆய்வு:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று இணை இயக்குநர் சேகர் (தடுப்பூசிகள்) அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் தடுப்பூசி பணிகள் மற்றும் பிரசவங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு அங்குள்ள பணியாளர்களை வெகுவாக பாராட்டினார். ஆய்வின் போது உடன் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி. மரு.புவனேஷ்வரி, மரு.சுமித்தா மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களும் இருந்தனர்...
 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம். கல்வித்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம்.

கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12 (1) C இன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் 25 % தமிழக அரசு இட ஒதுக்கீட்டடின் கீழ் இலவச LKG கல்வி இட ஒதுக்கீட்டின் கீழ் #ஆன்லைனில் மீண்டும் ஒரு வாய்ப்பு இலவசமாக #விண்ணப்பிக்க 12-10-2020 முதல் 07-11-2020 #வரை மீதமுள்ள இடங்களுக்கு மீண்டும் சேர்க்கை கோரும் விண்ணப்ப படிவம் 32 மாவட்டங்களில் உள்ள 8943 பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் நர்சரி தனியார் பள்ளிகளில் 141000 எல்கேஜி அல்லது முதல் வகுப்புக்கான இலவச இடங்கள் கல்வித்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது. 

http://tnmatricschools.com/rte/rtehome.aspx

தேவையான #ஆவணங்கள்:-

1. குழந்தையின் பிறப்பு சான்று
2. சாதிசான்று, வருமான சான்று
3. குழந்தை ஆதார் அட்டை
4. தந்தை ஆதார் அட்டை
5. குழந்தையின் புகைப்படம்

மேற்கண்ட அசல் ஆவணங்கள் எடுத்துவரவும். அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் உடனே திருப்பி அளிக்கப்படும்.

LKG-யில் 25% இலவச இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்றுவிட்டால் 8-ம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலலாம்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்-வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

சென்னை: நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது,
 
 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS