Saturday, July 18, 2020

இலவச கட்டில், மெத்தை மற்றும் நாற்காலி வழங்கும் விழா


திருப்பத்தூர்-ஜூலை-18
திருப்பத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டுக்கு இலவச கட்டில், மெத்தை மற்றும் நாற்காலி வழங்கும் விழா
திருப்பத்தூர், வேலூர் மேற்கு மாவட்ட கழகசெயலாளர், மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி,
திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.G.ரமேஷ்,
ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் R.ரமேஷ் Ex.சேர்மன், திருப்பத்தூர் நகர செயலாளர்.குமார் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள ஐசோலேஷன் வார்டிற்கு இலவச கட்டில் ,மெத்தை மற்றும் நாற்காலிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தி, மக்கள் சந்திப்பு நாளிதழ், 18.07.2020


Friday, July 17, 2020

#பெரியார்_சிலை_அவமதிப்பை_கண்டித்து_கண்டன_ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூர் ஜூலை -17

கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம
கும்பல் காவி சாயத்தை
ஊற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து தி.மு.க., தி.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் மாலை அணிவித்து கண்டன முழக்கமிட்டனர்.

திமுக, திராவிட கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தனித் தனியாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டன முழக்கமிட்டனர்.

கிருஷ்ணமூர்த்தி
செய்தியாளர்,
மக்கள் சந்திப்பு நாளிதழ்
திருப்பத்தூர்.
9442416077

Wednesday, July 15, 2020

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் - ஜூலை 15.
காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு தமிழக அரசின் ஆணைப்படி இன்று அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் அரசு உயர் நிலைப்பள்ளியில்
இன்று காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன் பிறகு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மணிவண்ணன் புத்தகங்கள் வழங்கினார். உதவி தலைமையாசிரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
*'தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும்'* என்ற கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் கனவை நனவாக்குவது நம் அனைவரின் கடமையாகும்.

கிருஷ்ணமூர்த்தி
செய்தியாளர்
மக்கள் சந்திப்பு நாளிதழ்
15-07-2020
9442416077