Saturday, May 7, 2022

யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா. சான்றிதழ் வைக்கும் கோப்புகள், பரிசுகளை தாளாளர் வழங்கினார்.

 ஊற்றங்கரை அடுத்த காரப்பட்டில் இயங்கி வரும் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா     தாளாளர் முனைவர் க.அருள் மாணவிகளுக்கு சான்றிதழ் வைக்கும் கோப்புகள், பரிசுகளை வழங்கினார்.


 

    மே 7;கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை அடுத்த காரப்பட்டில் இயங்கி வரும் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பயின்று பல்கலைக்கழகத் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரி தாளாளர் முனைவர் க. அருள் தலைமை வகித்தார். நிகழ்வில் முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் கிருஷ்ணகுமாரி அவர்கள் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார். மூன்று  ஆண்டுகள்  படித்து முடித்துச் செல்லும் மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்கள் வைக்கும் ஆயிரம் மதிப்புள்ள             கோப்பினையும் வழங்கி  தாளாளர் சிறப்புரை ஆற்றியதாவது: 
நமது கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மாணவ மாணவிகளின் நலன் கருதி செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரம் பெற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்கின்ற உயரிய நோக்குடன் இக்கல்லூரி செயலாற்றி வருகிறது. குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பேருந்துகள் இயக்கி நேரடியாக சிறிய கிராமப் பகுதிகளுக்கு சென்று வருகிறது. மாணவ மாணவிகளுக்கு கல்வி சார்ந்த உபகரணங்கள், உணவு வசதி, விடுதி போன்றவை கண்காணிப்படன் நடத்தி வருவதோடு துறை சார்ந்த சிறந்த தலைவர்களைக் கொண்டு இருபால் பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் திறம்பட கல்விச் சேவை புரிந்து வருகிறது. மாணவ மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக அவ்வப்போது உளவியல் ரீதியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, விழிப்புணர்வு சார்ந்த நாடகங்கள் சிறப்பு விருந்தினர் களை கொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் அவர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு எதிர்கால ஒழுக்க நலன்களை போதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நமது கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக தேர்வில் தங்கம் மற்றும் பல்கலைக்கழக தரவரிசையில் பத்துக்கும் மேற்பட்டோர் இடம்பிடித்துள்ளனர். கிராமப்புறத்தில் இருந்து வரும் ஏழை எளிய நடுத்தர மாணவ மாணவிகள் பயன்பெற்று கிராமப்புறங்களில் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. மாதம் இரு முறை பேராசிரியர்களின் துணையோடு பெற்றோர் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மாணவ மாணவிகள் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்னும் நோக்கில் எந்த கட்டணமும் எதிர்பார்ப்புமின்றி தமிழ்நாடு சீருடை பணியாளர் வகுப்பு, ராணுவம், மாநில மற்றும் மத்திய அரசு சார்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு திறம் மிக்க ஆசிரியர்களை வரவழைத்து கற்றுக் கொடுக்கப்படுகிறது. விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்பதால் கபாடி ,கோகோ கைப்பந்து, ஓட்டப்பந்தயம்,நீளம் தாண்டுதல் போன்றவற்றில் பங்கேற்க செய்து மாவட்ட அளவில் பரிசுகளையும் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. மேலும் மாணவ மாணவிகளின் தனித்திறன்களை வளர்க்கும் விதமாக நடனம் ,நாடகம் ஓவியம், நாட்டுப்புற கலைகள் போன்றவற்றை பயிற்சி அளித்து வரப்படுகிறது. நமது கல்லூரியினை பொறுத்தவரையில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து பூர்த்தி செய்யப்படுகிறது. மூன்றாண்டுகள் முடித்து செல்லும் மாணவிகள் மேற்படிப்பை மேற்கொண்டு பல துறைகளில் சாதிக்க வேண்டும் அதோடு கல்வி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வாழ்த்துக்களோடு தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
அனைவரையும் வரவேற்று  முதல்வர் பேசியதாவது: அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்கின்ற காலகட்டம் மாறி தற்போது நகர மாணவ-மாணவிகளை காட்டிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் வலுசேர்க்கும் விதமாக இன்று சாதனை புரிந்து தங்கப்பதக்கங்களை வென்று வருகின்றனர் அதோடு படிப்போடு நிறுத்திவிடாமல் எல்லா துறைகளிலும் பங்குபெற்று சாதனை புரிய வேண்டும் குறிப்பாக மாணவிகள் தங்களது படிப்பினை இடைநிற்றல் இல்லாமல் படித்து சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். இதனைத் தொடர்ந்து கணிதத் துறை தலைவர் கோவிந்தன், கணினித்துறை தலைவர் சங்கர்,ஆங்கிலத் துறை சரண்யா, கணினி பயன்பாட்டுத் துறை வித்யா, விலங்கியல் துறை ஜெயசீலன், தாவரவியல் துறை பிரபு, வேதியியல் துறை அன்பரசு, இயற்பியல் துறை கணபதி, வணிகவியல் துறை அம்பிகா,மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், இருபால் பேராசிரியர்கள் மூன்றாம் ஆண்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார்கள். நிகழ்வினை தொடர்ந்து மாணவ மாணவிகளின் பறை இசை, ஒயிலாட்டம், பரதம், நாட்டுப்புற பாடல்கள், விழிப்புணர்வு நாடகங்கள், மௌன நாடகங்கள் போன்ற நிகழ்வுகள் கண்களை கவரும்படி அழகாக மேடையில் அரங்கேற்றம் செய்தனர். விழாவில் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சைவம் மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மாணவிகள் நன்றியுரை கூறினர்.

No comments:

Post a Comment