டெல்லி - 23. பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் எல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. ராணுவ வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: சீன ராணுவம் எல்லையில் இருந்து பின் வாங்குவதற்கு தயாராக இல்லை. எல்லைப் பகுதிகளில் சுமார் 40,000 சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வான்வெளி தாக்குதல் தடுப்பு கருவிகள், நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து தாக்கக்கூடிய பீரங்கிகள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு வடக்கு பகுதியில் சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கவில்லை. இந்தியாவுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மதிக்கவில்லை. ராணுவ உயர்மட்ட அளவிலான அழுத்தம் இந்த விஷயத்தில் தேவைப்படுகிறது. தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் சில வாரங்களுக்கு முன்பாக சீனாவுடன் நடத்தியது போன்ற பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட தேவையுள்ளது. அல்லது சீன ராணுவம் பின்வாங்குவதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக, அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன ராணுவம் |
No comments:
Post a Comment