வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா பல முருகர் ஆலயங்களில் கொண்டாடப்பட இருந்த நிலையில், தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு மேலும் ஆகஸ்ட் 31 வரை பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளதால் பசலிக்குட்டை முருகர் ஆலயத்தில் நடைபெற இருந்த ஆடிப்பெருக்கு விழாவை ரத்து செய்து திருப்பத்தூர் காவல்துறை மற்றும் ஆலய நிர்வாகமும் அறிவித்துள்ளது.
மேலும் அனைத்து ஆலயங்களுக்கும் இதுபோன்ற தடை அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்ப்பு அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருத்த வருத்தமும், ஏமாற்றமும் தான். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் ஒத்துழைப்பு தந்தால்தான் கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடமுடியும் என்று தங்களை ஆறுதல் படுத்திக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment