Wednesday, July 22, 2020

மத்திய பிரதேச கவர்னர் இறப்புக்கு தமிழக முதல்வர் இரங்கல்

சென்னை : மத்திய பிரதேச மாநில கவர்னர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை  பலனின்றி (21.7.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான்  வேதனை அடைந்தேன்.  மூத்த அரசியல்வாதியான லால்ஜி டாண்டன், உத்தர பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பீகார் மாநில ஆளுநராகவும்  திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பொது வாழ்விலும், மக்கள் சேவையிலும் இவருடைய பணி மகத்தானது.  

லால்ஜி டாண்டனின் மறைவு, உத்தர பிரதேச மாநில மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை  பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment