

வாணியம்பாடி-16.
வாணியம்பாடி அண்ணாநகரில் வைதீஸ்வரன் என்பவர் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர் திருட முயன்ற சிசி டிவியில் பதிவான காட்சி வெளியானதால் பரபரப்பு.
வாணியம்பாடி அண்ணா நகர் பகுதியில் வைதீஸ்வரன் என்பவர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்து ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பல மணி நேரமாக வீட்டின் ஜன்னலை உடைப்பதும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்தும், அதனை கையில் வைத்து நுகர்ந்து சென்று திருட முயற்சிப்பதும் சிசி டிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் பலன் அளிக்கவில்லை என்பதால் மர்ம நபர் அங்கிருந்து திரும்பி சென்றார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் நெடுஞ்சாலை சந்திப்பு தொடங்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வரையில் மாலை நேரங்களில் தொடங்கி இரவு நேரங்களில் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கண்காணித்து செல்போன் மற்றும் பொருட்களை வழிப்பறி செய்வது வாடிக்கையாகி வருகிறது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment