Sunday, August 9, 2020

உத்தரவை மீறி செயல்பட்ட தொழிற்சாலைக்கு சீல்.- வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை.

வாணியம்பாடி - 9, 

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது.  இந்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று முழு ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு அறிவித்த நிலையில் 200 தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலை நடத்தி வருவதாக வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை விரைந்து சென்று தொழிற்சாலையை ஆய்வு செய்தனர். அப்போது பணியில் இருந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வெளியேற்றி தொழிற்சாலைக்கு  சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பாங்கி ஷாப் பகுதியில் தனியார் காலணி(பாலார் ஷுஸ்) தொழிற்சாலை அரசின் உத்தரவை மீறி பணியாட்களை கொண்டு தொழிற்சாலை இயங்கி வந்ததால் வட்டாட்சியர் பத்பநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment