![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgffumHtB0eINqUtc_2YJNln4Mq4RmjYo-E9upWcKMFEhsiUJteQLR0cBUOYQ-As6qpkqqsxcmEMqRkcjO9-a13rQUtOJC9D5kMxPDyzM-cQOfXvi5qNlmndHjZ_XLHXwGl1JTDDmXFDjM/w512-h288/ms-dhoni.jpg)
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
அவர் கிரிக்கெட் உலகில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளதாக முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவரது இரண்டாவது இன்னிங்சிற்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அதாவது கடந்த உலக கோப்பை
அரையிறுதிக்கு பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்த
நிலையில், அவர் ஓய்வு குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்தன. இந்நிலையில்
இந்த யூகங்களுக்கு தற்போது தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
74வது சுதந்திர தினம் நாடுமுழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,
தற்போது தோனியின் இந்த ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் ஓய்வு
குறித்து சக வீரர்கள் அதிர்ச்சி தெரிவித்தாலும், கூடவே அவரது சிறப்பான
எதிர்காலம் மற்றும் இரண்டாவது இன்னிங்சிற்கு தங்களது வாழ்த்துக்களையும்
தெரிவிக்க தவறவில்லை.
இரண்டாவது இன்னிங்சிற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து :
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5ZxyF0yVTPqnf3tOXOy-KtfjzG7u0ZXoxuD5XnVrmfPPQCgSQRfieKr9M3321855TaejcwhBKqzPx1sutui_UlQyzQu-rJM8KOXOHhIloor6ibnvi_Ja0NjAGPLWzRsEIo2oLnmGe1_Q/w410-h207/sachin+dhoni.jpg)
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டில் தோனி மகத்தான
பங்காற்றியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தோனியுடன் இணைந்து
2011 உலக கோப்பையை வென்றது மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார். தோனியின்
இரண்டாவது இன்னிங்ஸ் மகத்தாக அமையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcKXcI4UBXA_4YFQ_KYFABBW-MhHMrBRUbedX-6-OdKyMR6HqPCMmQ8wH5izixymGezh-Srr9RTSpqQuua2ijzx9LXwJneMFpqd7x8jDTQViJomrdJVI4gd_-JTEzumBAfF3jvPP46Dxc/w440-h296/Ravichandran-Ashwin.jpg)
இதேபோல ஆப்-ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வினும் தோனிக்கு தன்னுடைய
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தன்னோட ஸ்டைலிலேயே தோனிதன்னுடைய ஓய்வையும்
அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அஸ்வின், சாம்பியன் டிராபி, 2011 உலக
கோப்பை, சென்னை ஐபிஎல் வெற்றிகளை அவர் நாட்டுக்காக பரிசளித்துள்ளதாக
பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா பாராட்டு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMKRqpDS4DWXp8FubAoyzG1K7E2MjjCvcH4ocH5z4JOTpNgJ4tjrOxiqXdWsuZr7DTGT5Z61odeNmyQUfA6MPQwArg-6p4xBGHQTS1pfP-ONu3apRKhXZVpWz5dcJ2llGn5nnIO2Sr-ZE/w410-h274/Hardik_Pandya_PTI.jpg)
ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எப்போதும் எம்எஸ்
தோனி ஒருவர் மட்டுமே என்றும் தன்னுடைய நண்பர் மற்றும் மூத்த சகோதரர் அவர்
என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் மிகப்பெரிய உந்து
சக்தியாக தோனி இருந்ததாகவும், அவருடன் நீல ஜெர்சி போட்டு இனி ஆட முடியாத
குறை மட்டுமே தனக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கெவின் பீட்டர்சன் பாராட்டு
இதேபோல இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர் முகமது
கைஃயிப், ரஷித் கான், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கெவின் பீட்டர்சன்
உள்ளிட்டவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தோனிக்கு தங்களது வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் எதிரணியை கண்டு
அச்சம் கொள்ளாத தோனியின் ஆட்டம் மிகவும் பிடிக்கும் என்று
தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் தனது டிவிட்டர்
பக்கத்தில் தோனி குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1S0uLVzeLdTkxQq4SoMlJet8Enu8TiozTswpUC4i_AprpoqJ6y2k14v4s9n_aJnp1HRgVXFQRtbX1LXqdmBUDGGoJo-wipneMqCudbRibxsMvUHkoqZGPQAwVvlR8su95uTrgzzaoV8w/w384-h288/Tamil_Nadu_sbkn9oC.jpg)
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், '331
சர்வதேசப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியதற்காகவும்,
நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே கேப்டனான, 'கேப்டன் கூல்'
எம்.எஸ்.தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். அவரது சாதனைகளும்,
புகழும் ஒவ்வொரு இந்தியராலும் பேசப்படும்' என்று பதிவிட்டுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKeMb7oQzDrshKaj_vI46h7rtXNaFM09Frr_15o4HK3OOEsCQiPegkbVvPmR0Mmeb0_OKMiFn_9MrTEPpv_yYid82FGJHlGu1Xe0tcZwW_1yZZhT-QM36gJAQqn5NYv5Riei8or1CSPo8/w384-h312/mkstalin_4.jpg)
“நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை
வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர்! கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின்
கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது; சர்வதேச கிரிக்கெட்டுக்குப்
பிறகான உங்கள் அடுத்த இன்னிங்சுக்கு வாழ்த்துக்கள்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட்!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipVjCdNjX2VN4MoHu47tvcMF6eIqN0UALqYhpLPLy27xPhl8i4MrOr0bebfulCZ0hmd65gHmwsjg5h_KNJI2dX6ubXDQ5UxGo087FfPdgmD_wYv0YofPkb8XUaABPPNUs1hyphenhyphen5kTHD2zOI/w410-h274/Amit_Shah_PTI.jpg)
'தோனி தனது தனித்துவமான கிரிக்கெட் விளையாட்டின் மூலம் மில்லியன்
கணக்கானவர்களை தனது ரசிகனாக மாற்றியுள்ளார். வரும் காலங்களில் இந்திய
கிரிக்கெட் அணியினை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பங்களிப்பார் என
நம்புகிறேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இனி கிரிக்கெட்
உலகம் ஹெலிகாப்டர் ஷாட்களை மிஸ் செய்யும்.' என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி கூறியிருப்பதாவது:
"நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் பெருமைப்பட
வேண்டும். விளையாட்டுக்கு உங்களது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு
வாழ்த்துக்கள். சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான்
பெருமைப்படுகிறேன்".
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg687mDiGrPkynq8TMTa6Ug7OjMDRt4eehNbEmj3d35F9TdrPMRPxKLHaVkEUbYkeCWaPQNC7awQfiGKMlFT2Cqymt3sL3cTPxlBoaMblF4t9swWsQoQlfG_ypR3vPW6KL-_d5PrUJktHw/w410-h307/dhoni+wife.jpg)
கமல் ட்விட்டர் பதிவில் வாழ்த்து :
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP-aSY5c3HiYwvD69erab0uV1wIGL0j0Gf4Cyq1YqvmNGWwKYaclnG5mKlzlCFCyQ-3lz6g2kVAQ8kPp2BouaZhkY29o1rurVwgRxQ3L3Ku4_5wYvHYnFvtZxTBAunM6-CcvIf1kC-Fhg/w410-h255/KAMALHAASAN.jpg)
"அன்புள்ள தோனி.. விளையாட்டிலும் வாழ்க்கையிலும் சாதிக்க தன்னம்பிக்கை
எவ்வாறு உதவுகிறது என்பதைக் காட்டியதற்கு நன்றி. ஒரு சிறிய ஊரிலிருந்து
வந்து தேசத்தின் நாயகனாக வளர்ந்த வரை, நீங்கள் திட்டமிட்டு எடுத்த
முயற்சிகள், அமைதியான நடத்தை ஆகியவை இல்லாத குறையை இந்திய அணி உணரும்.
சென்னையுடனான உங்கள் காதல் கதை தொடர்வதில் மகிழ்ச்சி"
கோலி ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சி :
"அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாக வேண்டும். ஆனால், மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இந்த நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும். நான் மனிதனை பார்ப்பேன். சக வீரராக தோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும். அவருக்கு தலை வணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்."கேப்டன் கூல் தோனியின் கிரிக்கெட் பயணம் அனைவரது நெஞ்சிலும் என்றும் நீங்காத நினைவுகளாக, நிறைந்திருக்கும். அவரின் வாழ்க்கையில் அடுத்த கட்டம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்" - தமிழ் கருடா.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment