Wednesday, August 5, 2020

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் முதல் செங்கல் கொடுத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


அயோத்தி: ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பூமி பூஜை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பூமி பூஜை முக்கிய கட்டத்திற்கு வந்தது. பூமி பூஜை விழாவிற்கு வந்த பிரதமர் மோடி முதல் வெள்ளி செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டுவிழாவை தொடங்கி வைத்தார். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இது கருதப்படுகிறது. டெல்லியில் இருந்து வந்தது முதல் மீண்டும் டெல்லிக்கு திரும்பும் வரைக்கும் மாஸ்க் அணிந்தவாரே விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக கோடிக்கணக்கான ராம பக்தர்கள் ராம் என்று பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பியுள்ளனர். இந்த செங்கற்கள் அனைத்தும் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பல ஆண்டுகளாக தவம் இருக்கின்றனர். வசதி படைத்த பக்தர்கள், நிறுவனங்கள், மடலாயங்களில் இருந்து தங்கம், வெள்ளி, செங்கற்கள் கிலோ கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குஜராத் அகமதாபாத் ஜெயின் சமூக மக்கள் இணைந்து ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக 40 கிலோ வெள்ளி செங்கற்களை அனுப்பியுள்ளனர். இந்த செங்கற்களை ஆர்எஸ்எஸ், விஎச்பி பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூகத்தினர் வழங்கியுள்ளனர். இந்த செங்கற்களில் ஒன்றினை பிரதமர் மோடி எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

ராமர் கோவிலுக்கு வருவதற்கு முன்பு பிரதமர் மோடி அனுமான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் குழந்தை ராமரை வழிபட்ட மோடி நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினார் மோடி அதன் பின்னர் ஆரத்தி காட்டி வணங்கினார். இதனையடுத்து ராம ஜென்ம பூமியில் மரக்கன்றை நட்டு வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அரைமணிநேரம் நடைபெற்ற யாக நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பூமி பூஜை நடைபெற்றது. யாகத்தில் பங்கேற்ற மோடி மந்திரங்களை கூறி சிறப்பு வழிபாடு நடத்தினார். ஜெய் ஸ்ரீராம் முழக்கத்திற்கு இடையே முதல் வெள்ளி செங்கலை எடுத்து கொடுத்தார் பிரதமர் மோடி. இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென், உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

வரலாற்று சிறப்பு மிக்க ராம ஜென்ம பூமி பூஜை விழா இன்று நடைபெற்ற முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டது.

பூமி பூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை காரணமாக அயோத்தி நகரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்றனர்.



FOLLOW US OUR SOCIAL MEDIAS




No comments:

Post a Comment