திருப்பத்தூர் -5,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் மாற்றுத்திறனாளிகள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் என சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ரயில் பெட்டிகளில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை விற்று வாழ்ந்து வந்தனர். தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்த மாற்றுத்திறனாளிகள் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமைப் பிடியில் வாழ்ந்துவருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) பணிபுரியும் சுகந்தி அவர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள் என ரூபாய் 25000/- மதிப்புள்ள பொருட்களை இன்று அவர்களுக்கு வழங்கினார்.
ஆயுள் காப்பீடு துறையில் பணிபுரியும் மூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பத்தூர் நகர செயலாளர் அட்சயா க.முருகன், சமூக சேவகர் ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment