திருப்பத்தூர் -9,
கடந்த சில நாட்களாக புலிக்குட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதோ மிருகத்தின் கால் தடம் இருப்பதாக பயந்த குடியிருப்பு வாசிகள் ஆதியூர் ஊராட்சி செயலாளர் மூலமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையிலிருந்து வெங்கடேசன், தயாநிதி ஆகியோர் புலிக்குட்டை பகுதிக்கு நேரில் வந்து விலங்கின் கால் தடத்தை ஆராய்ந்தனர்.
பின்னர் அது சிறுத்தையின் கால்தடம் அல்ல என்றும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும் இது நாயின் கால்தடமாக இருக்கலாம் எனவும் மேலும் அப்பகுதியில் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் அநேகமானோர் மது அருந்துதல், சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அவர்கள் இதுபோன்ற வதந்திகளை கிளப்பலாம் எனவும் தெரிவித்தனர். உடன் ஊராட்சி செயலாளர் ரமேஷ் இருந்தார்.
No comments:
Post a Comment