Friday, March 12, 2021

திமுக போட்டியிடும் 173 தொகுதிகள் பட்டியல் வெளியீடு

 திமுக போட்டியிடும் 

173 தொகுதிகள் பட்டியல் வெளியீடு

 1. கும்மிடிப்பூண்டி.
2. திருத்தணி.
3. திருவள்ளூர்.
4. பூந்தமல்லி (தனி).
5.ஆவடி.
6.மதுரவாயல்.
7.அம்பத்தூர்.
8.மாதவரம்.
9.திருவொற்றியூர்.
10.ஆர்.கே.நகர்.
11.பெரம்பூர்.
12.கொளத்தூர்.
13.வில்லிவாக்கம்.
14. திரு.வி.க.நகர் (தனி).
15.எழும்பூர் (தனி).
16.ராயபுரம்.
17. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி.
18. ஆயிரம்விளக்கு.
19.அண்ணாநகர்.
20.விருகம்பாக்கம்.
21.சைதாப்பேட்டை.
22.தியாகராயநகர்.
23.மயிலாப்பூர்.
24.துறைமுகம்
25.சோழிங்கநல்லூர்.
26.ஆலந்தூர்.
27.பல்லாவரம்.
28.தாம்பரம்.
29.செங்கல்பட்டு.
30.உத்திரமேரூர்.
31.காஞ்சீபுரம்.
32.காட்பாடி.
33.ராணிப்பேட்டை.
34.ஆற்காடு.
35.வேலூர் தெற்கு.
36.அணைக்கட்டு.
37. கே.வி.குப்பம் (தனி).
38. குடியாத்தம் (தனி).
39. ஆம்பூர்.
40. ஜோலார்பேட்டை.
41. திருப்பத்தூர்.
42. பர்கூர்.
43. கிருஷ்ணகிரி.
44. வேப்பனஹள்ளி.
45. ஓசூர்.
46. பாலக்கோடு.
47. பென்னாகரம்.
48. தர்மபுரி.
49. பாப்பிரெட்டிபட்டி.
50. செங்கம் (தனி).
51. திருவண்ணாமலை.
52. கீழ்பென்னாத்தூர்.
53. கலசப்பாக்கம்.
54. போளூர்.
55. ஆரணி.
56. செய்யாறு.
57. வந்தவாசி (தனி).
58. செஞ்சி.
59. மைலம்.
60. திண்டிவனம் (தனி).
61. விழுப்புரம்.
62. விக்கிரவாண்டி.
63. திருக்கோவிலூர்.
64. உளுந்தூர்பேட்டை.
65. ரிஷிவந்தியம்.
66. சங்கராபுரம்.
67. கெங்கவல்லி (தனி).
68. ஆத்தூர் (தனி).
69. ஏற்காடு (தனி).
70. மேட்டூர்.
71. எடப்பாடி.
72. சங்ககிரி.
73. சேலம் மேற்கு.
74. சேலம் வடக்கு.
75. சேலம் தெற்கு.
76. வீரபாண்டி.
77. ராசிபுரம் (தனி).
78. சேந்தமங்கலம் (தனி).
79. நாமக்கல்.
80. பரமத்திவேலூர்.
81. குமாரப்பாளையம்.
82. ஈரோடு மேற்கு.
83. மொடக்குறிச்சி.
84. தாராபுரம்.
85. காங்கேயம்.
86. பவானி.
87. அந்தியூர்.
88.கோபிசெட்டிப்பாளையம்.
89. குன்னூர்.
90. கூடலூர் (தனி).
91. மேட்டுப்பாளையம்.
92. திருப்பூர் தெற்கு.
93. கவுண்டம்பாளையம்.
94. கோவை வடக்கு.
95. தொண்டாமுத்தூர்.
96. சிங்காநல்லூர்.
97. கிணத்துக்கடவு.
98. பொள்ளாச்சி.
99. மடத்துக்குளம்.
100. பழனி.
101. ஒட்டன்சத்திரம்.
102. ஆத்தூர்.
103. நத்தம்.
104. வேடசந்தூர்.
105. அரவக்குறிச்சி.
106. கரூர்.
107. கிருஷ்ணராயபுரம் (தனி).
108. குளித்தலை.
109. ஸ்ரீரங்கம்.
110. திருச்சி மேற்கு.
111. திருச்சி கிழக்கு.
112. திருவெறும்பூர்.
113. லால்குடி.
114. மணச்சநல்லூர்.
115. முசிறி.
116. துறையூர்.
117. பெரம்பலூர்.
118. குன்னம்.
119. ஜெயங்கொண்டம்.
120. திட்டக்குடி.
121. நெய்வேலி.
122. கடலூர்.
123. குறிஞ்சிப்பாடி.
124. புவனகிரி.
125 .சீர்காழி (தனி).
126. பூம்புகார்.
127. வேதாரண்யம்.
128. மன்னார்குடி.
129. திருவாரூர்.
130. நன்னிலம்.
131. திருவிடைமருதூர்.
132. கும்பகோணம்.
133. திருவையாறு.
134. தஞ்சாவூர்.
135. ஒரத்தநாடு.
136. பட்டுக்கோட்டை.
137. பேராவூரணி.
138. விராலிமலை.
139. புதுக்கோட்டை.
140. திருமயம்.
141. ஆலங்குடி.
142. திருப்பத்தூர்.
143. மானாமதுரை.
144. மதுரை கிழக்கு.
145. சோழவந்தான்.
146. மதுரை வடக்கு.
147. மதுரை மத்தி.
148. மதுரை மேற்கு.
149. திருமங்கலம்.
150. ஆண்டிபட்டி.
151. பெரியகுளம் (தனி).
152. போடிநாயக்கனூர்.
153. கம்பம்.
154. ராஜபாளையம்.
155. விருதுநகர்.
156. அருப்புக்கோட்டை.
157. திருச்சுழி.
158. பரமக்குடி (தனி).
159. ராமநாதபுரம்.
160. முதுகுளத்தூர்.
161. விளாத்திகுளம்.
162. தூத்துக்குடி.
163. திருச்செந்தூர்.
164. ஓட்டப்பிடாரம் (தனி)
165.சங்கரன்கோவில் (தனி).
166. ஆலங்குளம்.
167. நெல்லை.
168. அம்பாசமுத்திரம்.
169. பாளையங்கோட்டை.
170. ராதாபுரம்.
171. கன்னியாகுமரி.
172. பத்மநாபபுரம்.
173. நாகர்கோவில்

Friday, February 26, 2021

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை சுனில் அரோரா அறிவித்தார்.

 

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5  மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை சுனில் அரோரா அறிவித்தார்.

    வருகின்ற எப்ரல் மாதம் 6 ஆம் தேதி (06/04/2021) தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதனைத்தொடர்ந்து மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான தேர்தல் பார்வையளர்களாக தர்மேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.  

 

தேர்தல் அட்டவணை விபரம் வருமாறு

   வேட்பு மனு மார்ச் 12ம் தேதி முதல் ஆரம்பம்,

   வேட்பு மனு பெற கடைசி நாள் மார்ச் 19

   வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20

    வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 22

    வாக்குப்பதிவு ஏப்ரல் 6

    வாக்கு எண்ணிக்கை மே 2

  

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Friday, February 19, 2021

"சேவைகள் ஓய்வதில்லை சேவைக்குப் பின்னரும் உழைப்போம்" முப்பெரும் விழாவில் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சூளுரை.


 திருப்பத்தூர்-19

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம். திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக கடந்த 17ம் தேதி திருப்பத்தூர் எஸ்.ஆர்.கே. மஹாலில் கடலூர் மாநில பிரதிநிதிகள் பேரவை விளக்க கூட்டம். திருப்பத்தூர் மாவட்ட மையம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாவட்ட முதல் பேரவை கூட்டம் என முப்பெரும் விழாவாக நடைெபற்றது, 

விழாவில் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர்கள் நாராயணசாமி. ஜெயக்குமார் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வாணியம்பாடி கோட்ட தலைவர் சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில கெளரவ தலைவர் பரமேஸ்வரன் துவக்கவுைர ஆற்ற, மாவட்ட செயலாளர் சி,ஏ,பாண்டியன் வேலை அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் கணபதி நிதிநிலை அறிக்கை வாசித்தார். மேலும் விழாவில் மாநில பொதுச்செயலாளர் பா,இரவி அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கடலூர் பேரவை குறித்து விளக்கவுரை ஆற்றினார்,

    திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குனர் த.மகேஷ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன்ராஜேசகர், அரிகரன் உதவி கருவூல அலுவலர் த.வெங்கடேசன், மாநில பொருளாளர் மகாலிங்கம், மாநில செயலாளர் சுப்பிரமணியன், அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாநில தலைவர் இராமமூர்த்தி நிறைவுரை வழங்க, திருப்பத்தூர் கோட்ட சங்க தலைவர் சாம்ராஜ் நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது.

    விழாவில் ஓய்வுபெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் மற்றும் மாதம் குறைந்தது 9 ஆயிரம் வழங்கேவண்டும், அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பாஸ், ஆண்டிற்கு இருமுைற அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசாேதனை, ஏலகிரி மலைக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க  மாற்று பாதை வசதி, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். திருப்பத்தூர் நகரில் வணிகம் அதிகம் நடைபெறும் கச்சேரி தெரு. தருமராஜா கோயில் தெரு. பெரியகடை தெரு, ஆலங்காயம் ரோடு போன்ற தெருருக்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கவேண்டும், புதிய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும், ஓய்வூதியர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்தவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை மேற்காெள்ள ஆவண செய்ய வேண்டும், சம வேலைக்கு சமஊதியம் என்ற அடிப்பைடயில் ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும், கொரோணா காலங்களில் பாெதுமக்கள் நலன் கருதி பணியாற்றிய அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Monday, January 25, 2021

72 வது குடியரசு தினம் - ஒரு பார்வை


 
            இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Thursday, December 17, 2020

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது - காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

    ஆறுமுநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 2 ½ லட்சம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர்  கைது - எதிரிகளை கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முத்துகிருஷ்ணன், தலைமைக் காவலர் திரு. முத்துகுமார் முதல் நிலைக் காவலர் திரு. மாணிக்கம், பெண் முதல் நிலை காவலர் திருமதி. சியாமளா மற்றும் காவலர் திரு. ரமேஷ்கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (17.12.2020) ரோந்து சென்றபோது ஆறுமுகநேரி பேயன்விளை, கீழ தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் சக்தி விஜயன் (40) என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை, உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த தாசன் மகன் ஜேக்கப் (55) என்பவரிடமிருந்து வாங்கி, விற்பனை செய்வதற்காக ஆறுமுகநேரி, பேயன்விளை, கீழ தெருவில் உள்ள தனது வீட்டின் பின்புறம் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

மேற்படி தனிப்படையினர் குடோனை சோதனை செய்ததில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலை பொருட்கள், 12 மூடைகள் இருப்பது தெரியவந்தது.  இது சம்மந்தமாக ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 250 கிலோ புகையிலைப்பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
 

மேற்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி  தலைமையிலான தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.


 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

வாணியம்பாடி பாலாற்றில் பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிப்பு!


 

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா ராமநாயக்கன் பேட்டை பாலாற்றில் பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்து சிலைகளை மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 இதற்கு முன் பல வருடங்களுக்கு முன்பு இது போன்ற சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 மேலும் இன்னும் நிறைய இது போன்ற சிலைகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.


 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

இந்தியாவில் வாட்ஸப் மூலம் பணம் அனுப்பும் வசதி நடைமுறைக்கு வந்தது...



    தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ)விடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்த நிலையில், இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018ஆம் ஆண்டு, யூபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பாட்டாளர்கள் பணத்தை ஒருவருக்கு அனுப்பவும், பெறவும் முடியும். ஆனால், இதற்கான பரிசோதனை குறிப்பிட்ட சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் சேவையை வழங்க என்பிசிஐ கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதன் மூலம் வர்த்தகர்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்று, பணத்தை வாட்ஸ் அப் மூலம் பெறலாம். ஒருவர் மற்றொருவருக்குப் பணத்தையும் அனுப்ப முடியும். வாட்ஸ் அப்பில் பணம் அனுப்பும் வசதி படிப்படியாக அமல்படுத்தப்படும்.

    ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளின் ஆதரவுடன் இந்த பேமெண்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் இந்தியாவின் தலைவர் அபிஹிஜித் போஸ் விடுத்த அறிவிப்பில் கூறுகையில், 'ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து எளிமையாக, பாதுகாப்பான முறையில் இந்தியா முழுவதும் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

யுபிஐ முறை என்பது பரிமாற்றுச் சேவை. டிஜிட்டல் பொருளாதாரத்தின் நலன்களையும், நிதிச் சேவைக்குள் இதற்கு முன் வாய்ப்பு கிடைக்காத பலரையும் கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 'வாட்ஸ் அப்பில் வங்கிச் சேவையைச் செய்வது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வசதியைக் கொடுத்து வங்கியை எளிதாக நாடவைக்கும். வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம் இனிமேல், நாடு முழுவதும் மக்கள் எளிமையாக நிதிச் சேவைகளைப் பெற முடியும். டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவது பெருமையாக இருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி தொடர்ந்து எளிமையாகவும், வசதியாகவும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்' எனத் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம் ஒருவருக்கு புகைப்படம், வீடியோ, ஆடியோ அனுப்புவதைப் போல் எளிமையாக அனுப்ப முடியும். அதற்கு முன்னதாக, செட்டிங்ஸில் சென்று பேமெண்ட் பகுதியில், நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கணக்கை இணைத்துவிட வேண்டும். அதன்பின் வங்கிக்கணக்கில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்து அதை உறுதி செய்யும். அதன்பின் யுபிஐ மூலம் எளிதாகப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

கடந்த ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் வசதியை உலகின் முதல் நாடாகத் தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரை பேடிஎம், கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் ஃபோன்பே, அமேசான் பே ஆகியவை ஏற்கெனவே வலிமையாக இருக்கும் நிலையில், அவர்களோடு வாட்ஸ் அப் நிறுவனமும் போட்டியிடும். ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பேமெண்ட் சர்வீஸ் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS