Friday, August 21, 2020

திருப்பத்தூர் கிளைச் சிறையில் சிறைக் காவலர் உட்பட 21 பேருக்கு கொரோனா!. சிறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் -21
    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில் சுமார் 40-பேர் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலர் ஜாமினில் வெளியே சென்றுள்ளனர். சிறையில் தற்போது 29 சிறைக் கைதிகள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் ஒருவர் சிறைக்கு வந்துள்ளார். அவருக்கு கடந்த 19ம் தேதி நோய்த் தொற்றானது உறுதியாகி உள்ளது, அதேபோன்று கடந்த 5 நாட்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சென்னையைச்  சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 5 பேர் சிறைக்கு சென்று உள்ளனர். சென்னை வாசி என்று தெரிந்தும் அவர்களை தனிமை படுத்தாமல் சிறைக்கைதிகள் உடன் ஒன்றாக அடைத்துள்ளனர். இதனால் மற்ற சிறைக் கைதிகளுக்கும் நோய்த் தொற்றானது பரவியுள்ளது. அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர் ஒருவருக்கு ஒருவர் நோய்த் தொற்றானது பரவியுள்ளது. 

    இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஐந்து சிறைக்கைதிகள் பரோலில் வெளியே சென்றது தெரியவந்துள்ளது. அவர்களுக்கும் நோய்த் தொற்றானது உறுதியாகியுள்ளது. கிளைச் சிறை அதிகாரி சையது அமீர் என்பவரின் மெத்தன போக்கால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இன்று மாலை 4 மணியளவில் நான்கு நபர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். 10 நபர்கள் அகரம் சித்தா மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிறையில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். 

 
 


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment