Thursday, September 3, 2020

தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை.

 


தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் மட்டும் பொது போக்குவரத்து கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி, வருகிற 7ஆம் தேதி முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை தொடங்க உள்ளது.

மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர, பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

ஐந்தரை மாதங்களுக்குப் பின், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படுவதால், அதிகளவில் பயணிகள் போக்குவரத்து நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணி நிமித்தமாகவும், வர்த்தக ரீதியாகவும் இனி வெளியூர்களுக்கு செல்வதில் எந்த சிரமமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment