திருப்பத்தூர் - 24.
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர்
உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 63,182 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 21,38,704 பேருக்கு கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 1,99,749 ஆக
அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 6,504 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். இதுவரையில், 1,43,297 பேருக்கு கொரோனா பாதிப்பு
குணமடைந்துள்ளது.
இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,320ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் 1,299 பேருக்கும்,
செங்கல்பட்டில் 419 பேருக்கும்,
காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும்,
மதுரையில் 326 பேருக்கும்,
திருவள்ளூரில்
378 பேருக்கும்,
விருதுநகரில் 424 பேருக்கும்,
கிருஷ்ணகிரியில் 82 பேருக்கும்,
தருமபுரியில் 36 பேருக்கும்,
வேலூரில் 174 பேருக்கும்,
திருவண்ணாமலையில் 134 பேருக்கும்,
ராணிப்பேட்டையில் 222 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மரணம் - 1. 288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment