![]() |
டெல்லி செங்கோட்டை |
கொரோனா முன்கள பணியாளர்களை சுதந்திர தின
கொண்டாட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை
அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திர தின விழாவுக்கான வழிகாட்டு முறைகளை மத்திய உள்துறை அமைச்சகம்
வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும்
நிகழ்ச்சியில் குறைந்தளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்
சுதந்திர தின விழா இணையதளம் வாயிலாக ஒளிபரப்பப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அதிகளவில் பார்வையாளர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களை
கவுரவிக்கும் விதமாக அவர்களை சுதந்திர தின விழாவிற்கு அழைக்க வேண்டும்
என்றும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு அழைப்பு
விடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment