திருப்பத்தூர் ஜூலை 31.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் பெருந்தலைவர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்
1) இலவச மின்சார சட்ட திருத்த மசோதா 2020 இலவச மின்சார ரத்து செய்வதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர். ஆகவே மத்திய அரசு கொண்டுவந்த இலவச மின்சார சட்டம் ரத்து செய்வதை அமல்படுத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும்
2) தமிழக அரசு பம்ப்செட்டுக்கு கூடுதல் குதிரை திறனுக்கு 1 HP-க்கு 20.000 கட்டணம் செலுத்த அரசாணை வெளியிட்டதை கைவிடக் கோரியும்,
ஆழ்துளைக்கிணறு 500 அடி மற்றும் ஆயிரம் அடிக்கு கீழ் நீர்மட்டம் உள்ளதால் கூடுதல் HP பொருத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவே விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கட்டணமின்றி இலவசமாக கூடுதல் HP பதிவு செய்ய வேண்டும் என்றும்,
3) தொடர்ந்து வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தமிழக அரசு மானிய விலையில் வழங்கிய விவசாய கருவிகள் பயனற்று சூழ்நிலையிள் உள்ளதால் அதனை விவசாயிகளுக்கு பயன்படுத்த ஆவண செய்யுமாறு கோரிக்கை
4) மத்திய அரசு வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு மசோதா 2020 விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே மசோதா 2020 கைவிடவேண்டும். போன்ற நான்கு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில செயலாளர் திருவள்ளுவன், மாநில பொருளாளர் ஆனந்தன், மாநில இளைஞரணி தலைவர் வெங்கடேசன், வேலூர் மாவட்ட செயலாளர் சிவாஜி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் குப்புசாமி, மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாசம், ஒன்றிய செயலாளர் உதயகுமார் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் சமூக இடைவெளியுடன் மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்தனர்.
No comments:
Post a Comment