Tuesday, July 21, 2020

நாளை முதல் ஊரடங்கு கிடையாது! - முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: கொரோனா பிரச்னைக்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. நாளை (ஜூலை 22)முதல், கர்நாடகாவில் ஊரடங்கு இருக்காது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது. பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்பதால், மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நிலைநாட்டி கொண்டே கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும். கொரோனாவிற்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

மஹாராஷ்டிரா, தமிழகத்தில் இருந்து வருபவர்களால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. கொரோனா பிரச்னைக்கு நிபுணர்கள் ஒரு புதிய திட்டத்தை தெரிவித்துள்ளனர். பாதிப்பை கண்டறிதல், தடமறிதல், பரிசோதனை, சிகிச்சை, மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

No comments:

Post a Comment