திருப்பத்தூர்-ஜூலை-21.
![]() |
எஸ்.பி. விஜயகுமார் |
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த முகிலன் (27). கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-ம் தேதி), முழு ஊரடங்கை மீறி தேவையில்லாத காரணங்களுக்காக பைக்கில் வெளியில் சுற்றியதாகக் கூறப்படுகிறது. வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் நகர போலீசார் முகிலனின் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகிலன், அருகில் உள்ள தன் அக்கா வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை கொண்டுவந்து.`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம்’ என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார்.
![]() |
முகிலன் |
இதில், பலத்த தீக்காயமடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. மருத்துவக் குழுவின் சிறப்பு கவனிப்பில் இருந்த முகிலன், 9 நாள்களுக்குப் பிறகு, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இறந்த நபருக்கு 6 மாத கைக் குழந்தை உட்பட சின்ன சின்னதாக மூன்று குழந்தைகள் இருக்கிறது. குடும்பச் சூழல் இப்படியிருக்க அவர் தற்கொலை முடிவை எடுப்பதற்கு மதுவும் ஓர் காரணம் என்று நினைக்கிறோம். மருத்துவத்துக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இறந்த நபரின் மனைவிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், விதவைக்கான மாதாந்தர உதவித் தொகை கிடைக்கவும் கலெக்டர் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறோம்’’ என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment