Friday, August 21, 2020

சொத்துக்காக கொலை?. உடலை தோண்டி எடுக்க தாசில்தாரிடம் மனு!. திருப்பத்தூரில் பரபரப்பு!.

   

 திருப்பத்தூர்-21.

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ரவிக்குமார் இவரது சகோதரர் ராஜேந்திரன் (59) என்பவர் நெய்வேலியில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். பணிச்சுமை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி சேலம் நெத்திமேடு அகரம் திருமண மண்டபம் அருகில் உள்ள வைபவ் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்துள்ளார். 

     இதுகுறித்து திருப்பத்தூரில் உள்ள அவரது உறவினர்களிடம் மாரடைப்பு காரணமாக உங்களது சகோதரர் மரணம் அடைந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதனை அறிந்து சேலத்தில் இருந்து அவரது சொந்த ஊரான திருப்பத்தூரில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து திருப்பத்தூரில் அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மனைவி சாந்தி (42) என்பவர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சொத்து மற்றும் பணத்திற்காக கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து சரவணன், சந்துரு, சாந்தி ஆகியோர் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக வினோத் ராஜ் என்பவர் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். 

    புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் சரவணன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இதுகுறித்து திருப்பத்தூர் தாசில்தாரிடம் உடலைத் தோண்டி உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளார். பின்னர் அவரது சகோதரர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது சகோதரர் சொந்த ஊரான திருப்பத்தூரில் செட்டில் ஆகப் போவதாக அவரது மனைவியிடம் கூறியுள்ளார். அதனால் சொத்துக்கள் நமக்கு கிடைக்காது என்ற எண்ணத்தில் அவரை ஊருக்கு அனுப்பி வைத்தால் நமக்கு தான் ஆபத்து என்று ஆரோக்கியமாக இருந்த அவரை மர்மமான முறையில் கொலை செய்திருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. இதனால் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment