திருப்பத்தூர் - 6,
திருப்பத்தூர் அருகே கடந்த 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நக்சலைட்டுகள் தாக்குதலில் 4 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்று 40வது நினைவஞ்சலி வீர வணக்கநாள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வணிக வரி பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி., திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள், வேலூர் மண்டலா துணைத் தலைவர் என்.காமினி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.மயில்வாகணன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கியூ பிரான்ச் காவல் கண்காணிப்பாளர் ஜே.மகேஷ், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர். எம்.அசோக்குமார் ஆகியோர் உயிர் தியாகம் செய்த 4 காவலர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து பின்னர் 21 முழங்க மரியாதை செலுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment