![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkx7ZakCBsE3HYCMuWNUyYaXK13zK2ZmLpEFJO462Xx358d4dSll2pqTmKakGrxVO3iP60gP8Q7cHfiXnHnyO6vfG2hNh0kxnjbHOHIx18OF0aJwvlsJ3xP9oDDtdPkmwaH39UmJJi1xs/w173-h263/Student.jpg)
திருப்பத்தூர்-6,
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் தினேஷ்குமார் (15) மிட்டூர் அரசு பள்ளியில் 9 வகுப்பு முடித்துவிட்டு 10 வகுப்பு சென்ற நிலையில் பள்ளிக்கு சென்று இலவச பாடபுத்தகம் வாங்கி வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளி சிறுவர்கள் வீட்டில் இருந்த நிலையில் வந்தால் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர்.
இதனை கண்ட
தினேஷ்குமார் தனது பெற்றோர்களிடம் தனக்கும் செல் போன் வாங்கி தரும்படி
கேட்டுள்ளான் விவசாய கூலித்தொழிலாளியான பெற்றோர்களால் செல்போன் வாங்கி
தரமுடியாத நிலை இருத்துள்ளது இந்த நிலையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சக
நண்பர்களிடம் அமர்ந்து கண்டு ரசித்ததோடு விளையாடவும் ஆசைபட்டு
நண்பர்களிடம் செல்போன் கேட்டதாக தெரிகிறது.
தினேஷ்குமார் விளையாட யாரும் செல்போன் தராததால் தான் பப்ஜி விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் வீட்டுற்க்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் அவசர அசரமாக தனது தாயின் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளான்.
இது குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த குரிசிலாப்பட்டு போலிசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment