![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUZnUux4ZYvJ1ccyFkv51HvgMBdy79cu5qeTIS_a0euFLGqWOzP9CCdjUkaURmbdiJNFzAQJYpk6mplT9ISdMwsg8tcCTlEslFsuI10zU59MzlEU5lWitUDcm6N75ozBUZcJfl3fc0N60/w384-h264/Tamil_News_large_2592463.jpg)
இடுக்கி: இடுக்கி நிலச்சரிவில், இன்று(ஆக.,10) மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள டீ எஸ்டேட் பகுதியில், கனமழை காரணமாக ஆக.,07 அன்று அதிகாலை 4:30 மணியளவில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த பலர் மாயமாகினர்.
அதில் இருந்து தப்பித்த சிலர், தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 43 ஆக இருந்தது. இந்நிலையில், மேலும் 5 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
மண்ணுக்குள் புதைந்திருக்கும் 22 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களை, மோப்ப நாய்களின் உதவியுடன் தேசிய மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment