ஜோலார்பேட்டை-10,
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பரசம்பேட்டையில் ரமேஷ் (36) என்பவர் மளிகை வியாபாரி. இவர் திருப்பத்தூருக்கு அடிக்கடி சென்று மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம். இவருக்கு கடந்த 15 முன் கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதற்கிடையில் அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவரது தாயார் மற்றும் மளிகை கடாயில் பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் மளிகை வியாபாரிக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவரை சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் உடல் அரசு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூரில் தற்போது பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment