Tuesday, August 11, 2020

கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது.

 

 ஹரே ராம  ஹரே ராம ராம  ராம ஹரே! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே
 

    இன்று கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. தசாவதாரத்தில் 9-வது அவதாரம் ஸ்ரீகிருஷ்ண அவதாரம். கிருஷ்ணர் பூமியில் அவதரித்த தினம் தான் கிருஷ்ண ஜெயந்தி. இது தென்னிந்தியாவில் கிருஷ்ணஜெயந்தி என்றும், வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி' என்றும் அழைக்கப்படுகிறது. 

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் வசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் சிறைக்குள் அவதிரித்தார்.

கிருஷ்ணர் தனது குழந்தை பருவமான 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், ஏழு வயதில் கோபியர்கள் கொஞ்சும் ரமணனாகவும், தனது எட்டு முதல் பத்து வயது வரை மதுராவிலும் இருந்தார். தனது ஏழாவது வயதில் கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

வடஇந்தியாவில் கிருஷ்ணரின் இளமை காலத்தை, இளம் பெண்களுடன் இணைந்து நடித்து கொண்டாடுகின்றனர். மகாராஷ்டிராவில் சிறுவர்கள் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணெய்த்தாழியை, பிரமிடு கோபரம் அமைத்து அடிக்கின்றனர். தென்னிந்தியாவில் தேரோட்டம் மற்றும் உறியடி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கண்ணனை வீட்டிற்கு அழைக்கும் விதமாக வீட்டில் கண்ணனின் பாதங்களை அரிசி மாவினால் வரைந்து அல்லது தன் வீட்டில் உள்ள சிறு குழந்தையின் பாதத்தை மாவில் நனைத்து பாதத்தை தரையில் பதிக்கின்றனர்.

எப்படி கொண்டாட வேண்டும்? 
 மாலை நேரத்தில் கண்ணனின் படத்தை பூக்களால் அலங்கரித்து நெய் விழக்கேற்றி வழிபட வேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, போன்ற பிரசாதங்களை அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ண பகவானுக்கு நெய்வேதியம் செய்வார்கள்.
 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment