திருப்பத்தூர்-2,
திருப்பத்தூர் மாவட்டத்தில் 03.08.2020 திங்கட்கிழமை முதல் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை முடிவு செய்யும் வகையில் வட்டாட்சியர், மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர், நகராட்சி பொறியாளர் ஆகியோர் தலைமையில் வணிகர் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், ஜவுளிக்கடை சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அனைவரின் கோரிக்கைகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் ஆலோசனை படியும், மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கலாம்.
ஓட்டல் கடைகள் மட்டும் இரவு 8.00 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டல் கடைகள் மட்டும் இரவு 8.00 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
😷 கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.
🕴️ தனிமனித இடைவெளி தவறாமல் பின்பற்ற வேண்டும்.
❌ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் பொருந்தாது.
❌ அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் நேரக்கட்டுப்பாடு மாற்றம் வர வாய்ப்பு உண்டு.
No comments:
Post a Comment