ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான
முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை
(புதன்கிழமை) நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர்
கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
மோகன் பகவத், மாநில முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து
பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி
தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட
பின்னர் எப்படியிருக்கும் என்கிற மாதிரி புகைப்படங்கள்
வெளியிடப்பட்டுள்ளது. அந்த மாதிரி புகைப்படத்தில், கோவிலின் உச்சியில்
காவிக்கொடி பறக்க, அழகான கட்டமைப்புகளுடன் ராமர் கோயில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment