மதுரை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மற்றும்
பரிசோதனை நிலையங்களிலிருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளை முறையாகக் கையாளவில்லை
என்றால் கொரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள்
அதிகமுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்து வந்தனர்.
மேலும்
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த
வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள்,
கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என தமிழக அரசுக்கு ஐகோர்ட்
கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில்
வெளியிட மறுப்பது ஏன்? மதுரையில் கொரோனா சோதனை முடிவு வருவதற்கு 7 நாள் வரை
தாமதமாவது ஏன்? என்று பல்வேறு சரமாரி கேள்விகளை தமிழக அரசுக்கு
வைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை கட்டணம் அரசு நிர்ணயித்தபடி உள்ளதா? என தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசாணையின் படி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment