நாட்றம்பள்ளி.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தொல்கேட், பாரதிதாசன் கல்லூரி அருகில் 3 இளைஞர்கள் கத்தியை காட்டி வனிதா என்ற பெண்மணியிடம் மிரட்டியுள்ளனர். அப்பெண்மணி பயத்தால் கூச்சலிட்டதால் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அந்த இளைஞர்களை பிடித்து நாட்றம்பள்ளி காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.
காவல்துறையினர் அவர்களைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் புதியதாக பட்டாக்கத்தியினை வாங்கியுள்ளனர். முதன்முறையாக அவர்கள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது. வழிப்பறி, கொள்ளை என தொடர்ந்து ஆங்காங்கே நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment