ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை.
கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர்.
நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை
வணங்கி புனித நீராடுவார்கள். ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி
பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை
வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment