திருப்பத்தூர் கோட்டை அரிமா அரிமா சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டனர். சாசன தலைவர் எஸ்.வி.ராஜேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் ஆளுநர் இரத்தின நடராஜன், மாவட்ட தலைவர்கள் எம்.கள்ளழகர், பி.ஆர்.தேவராஜன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பொறுப்பில் அமர்த்தினர். தலைவராக டி.பி.விஜயகுமார், செயலாளராக விபுள் ஜடேஜா, பொருளாளராக எஸ்.சாந்திபூஷன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் இணைத்தல் மற்றும் சேவை திட்டங்கள் வழங்குதல் நடைபெற்றது.
மண்டலத் தலைவர் தமீம் அஹமத், வட்டாரத் தலைவர் ரத்தினம், சங்க வழிகாட்டித் தலைவர் மாங்கிலால் ஜெயின், சங்க விரிவாக்கத் தலைவர் ஸ்ரீபால் ஜெயின், மாவட்டத் தலைவர்கள் எஸ்.கோபிநாத், த.நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் விபுள் ஜடேஜா நன்றியுரை வழங்கினார்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment