Tuesday, August 4, 2020

திருநங்கைகள் மற்றும் நரிக்குறவ இன மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் -4,
    திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் விரிவாக்க கல்வி மற்றும் சேவை மையம் மற்றும் கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனமும் இணைந்து, திருநங்கைகள் மற்றும் நரிக்குறவ இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,
    கொரோனோ பேரிடர் காலங்களில் திருநங்கைகள் மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலராக இணைந்து பல்வேறு சேவைகளை செய்து உள்ளார்கள் என்பதை  பாராட்டி பேசினார். இவ்விழாவில், மகசாசே விருது பெற்ற குழந்தை பிரான்சிஸ் ஐவிடிபி நிறுவன தலைவர் 210 நபர்களுக்கு தேவையான 25 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் எண்ணெய் ஆகியவற்றை வேலூர் மாவட்ட பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளை பதிவு பெற்ற அனைத்து திருநங்கைகளுக்கும் (176) கொடுத்து உதவினர்.
    தூய நெஞ்சக் கல்லூரியின் செயலர், முனைவர்.அருட்தந்தை அலெக்சாண்டர் பேசுகையில், ஐவிடிபி தொண்டு நிறுவனமானது பல்வேறு சேவைகளை செய்து வருகிறது குறிப்பாக பெற்றோரை இழந்த கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை கொடுத்து ஊக்குவித்து வருகின்றது. மேலும் இதுபோன்ற ஊரடங்கு சமயத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு பொருளுதவி கொடுத்து உதவுவது பாராட்டுத்தக்கது. கல்லூரியின் முதல்வர் முனைவர்.அருட்தந்தை மரிய அந்தோணிராஜ் பேசுகையில் கல்லூரியின் மூலமாக சுமார் 1300 குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகளை கடந்த மூன்று மாதங்களுக்குள் செய்துள்ளோம். இதற்கு கல்லூரி நிர்வாகமும் முன்னாள் மாணவர் சங்கமும் ஏற்பாடு செய்தார்கள். மேலும் வேலூர் பகுதியில் திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளையின் திட்ட இயக்குனர், கவிதா அவர்களும், செயலாளர், சுமதி அவர்களும் கலந்து கொண்டார்கள்.
    மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர். தமிழ்மாறன் அவர்கள் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு தேவையான அரசின் நலத்திட்ட உதவிகளும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற சில பயனுள்ள தகவலும் கூறினார். நிகழ்ச்சிக்கு தூய நெஞ்சக் கல்லூரியின்  விரிவாக்க கல்வி இயக்குனர், அருட்தந்தை டேனியல் ஆம்ரோஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
    தூய நெஞ்சக் கல்லூரியின்  திட்ட அலுவலர் நிகோலஸ்பிரகாஸ். வேலூர் மாவட்ட பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளையின் திட்ட மேளாலர் வேலு, மக்கள் பாதை ராதாகிருஷ்ணன். தூய நெஞ்சக் கல்லூரியின் சமூகப்பணி துறை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர். .சந்துரு   ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மேலும் திருப்பத்தூர் மட்டுமல்லாமல் வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்த பகுதி திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இறுதியாக  இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளையின் இலக்கு மக்களான  திருநங்கை. கற்பகம் அவர்கள் நன்றியுரை கூறினார். சுமார் 210 குடும்பங்களுக்கு 2,94,000  மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது...

FOLLOW US OUR SOCIAL MEDIAS




No comments:

Post a Comment