Tuesday, August 11, 2020

பிரணாப்பின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

 

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டில்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக்கூறியுள்ளது.

டில்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து நேற்று அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் டில்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியில் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவருக்கு ஏற்பட்ட ரத்த கசிவுக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. கொரோனா தொற்று காரணமாக பிரணாப்பின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

 

No comments:

Post a Comment