Saturday, August 15, 2020

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றைய சுதந்திரதின கொண்டாட்டங்கள்.

 திருப்பத்தூர்-15,

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோலையார்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக  இடைவெளியுடன் PTA துணைத்தலைவர் R.சுந்தரேசன் தேசிய கொடியை ஏற்றிவைத்தரர்  உடன் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

74ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூரில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை சார்பாக கபசுரகுடிநீர், சுக்கு காபி மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். ஜனார்த்தனம் சிறப்பு விருந்தினராகவும்,  திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் OBC மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். 



 

திருப்பத்தூர் அடுத்த  சின்ன உடையாமுத்தூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 74- வது சுதந்திர தின விழாவினைக் கொண்டாடினர்.

திருப்பத்தூர் ஆக15, திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அடுத்த சின்ன உடையாமுத்தூர் கிராமத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 74- வது சுதந்திர தின விழா தாளாளர் C.S. ராஜா அவர்களின் வழிகாட்டுதலில்  கொண்டாடினர். தேசியக் கொடியினை செயலாளர் C.S.R.வினோத் மற்றும்  பள்ளி முதல்வர் C.S.R.கௌதம்,  ஏற்றினர்.மேலும் நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும்    முகக் கவசம், இனிப்பு வழங்கினர். பள்ளி முதல்வர் செய்தியாளருக்கு குறிப்பிட்டதாவது:
கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதோடு மாணவர்களின் எதிர்கால அக்கறைக்கொண்டு தொடர்ந்து இணைய வழி வகுப்புகள் நடைப்பெற்று வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பள்ளியின் சார்பில் நேரடியாகச் சென்று நலதிட்ட உதவிகளை செய்து வருவதோடு அவர்களின் குழந்தைகளுக்கு கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டு வருகின்றது. துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் என கொரோனா தொற்று பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்ட வர்களின் பிள்ளைகளுக்கு கட்டணச் சலுகை வழங்கி வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்வு முகக் கவசம் அனிந்து சமூக இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் நிகழ்த்தப்பட்டது.



திருப்பத்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 74-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் துப்புரவு பணியாளர்கள், மாணவ- மாணவிகளுக்கு முகக் கவசம் மற்றும் ஆடை வழங்கி கொண்டாடிய தலைமையாசிரியை ஜெயகாந்தம்.

திருப்பத்தூர் ஆக15, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 74- வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தலைமையாசிரியை ஜெயகாந்தம் தேசிய  கொடியினை    ஏற்றினார்.

இந்நிகழ்வில்   அப்பகுதியினைச் சுற்றியுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு ஆடை மற்றும் முகக்கவசம் வழங்கினார். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்காக துப்புரவு பணியாளர்களின் பங்களிப்பு அதிக அளவில் இருந்து வருவதால், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு செய்யப்பட்டது என தலைமையாசிரியை கூறினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமார், பொருளாளர் புலவர் சம்பத்து, கல்வி மேலாண்மைக் குழு தலைவர் முத்தம்மாள், ஊராட்சி செயலர் ராஜமாணிக்கம்  மற்றும் மாணவ- மாணவிகள் என பலரும் சமூக இடைவெளியுடன் கலந்துக்கொண்டனர். 


 
 
 74ஆம் ஆண்டு சுதந்திர தின விழா திருப்பத்தூர் கோட்டை லயன்ஸ் சங்கம் சார்பாக வெங்களபுரம் ஜி. எல். இன்டர்நேஷனல் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்க தலைவர் விஜியகுமார் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் மாவட்ட தலைவர்கள் எஸ். கோபிநாத், த. நடராஜன், சாசன தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், ஜி. எல். இன்டர்நேஷனல் நிறுவனம் பாபு, ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 




 
 
ஆதியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 74வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் ரமேஷ் தேசிய கொடியேற்றினார். ஊர் பொதுமக்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர். 
 
 திருப்பத்தூர் மாவட்டம்
ஜோலார்பேட்டையில் இன்று 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பசுமை சோலையார்பேட்டை அமைப்பின் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டது. சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். திரு.S.P.சீனிவாசன் ஜோலார்பேட்டை நகர செயலாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பே.வினோத்குமார், இரா.இராஜ்குமார், ஏ.ஓபேத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
 


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment