Tuesday, August 4, 2020

சரிவர குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வாணியம்பாடி கோணாமேடு பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்.


வாணியம்பாடி ஆக 03 :
    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் வாணியம்பாடியில் வேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




FOLLOW US OUR SOCIAL MEDIAS




No comments:

Post a Comment