Thursday, August 6, 2020

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு .


சென்னை-6,

    பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், உயர் கல்வி துறையின் கீழ், 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றிலும், தொழில் வணிகத்துறை மற்றும் தொழில்நுட்ப கல்வி துறையின், கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய, மூன்று இணைப்பு கல்லுாரிகளிலும், முதலாம் ஆண்டு, டிப்ளமோ படிப்பு சேர்க்கைக்கான, இணையதள விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கியது. இதுவரை, 16 ஆயிரத்து, 940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நேற்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, டிப்ளமா படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, வரும், 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பதிவேற்றத்தை, ஆகஸ்ட், 10 முதல், 20ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment