![]() |
படும் நிலா பாலு |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. அவர்கள் கடந்த 5-ம் தேதி கொரோனா தோற்று
பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அவரது உடல்நிலை
கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டதாக தகவல்கள்
பரவின.
ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப்பற்றிய வதந்திகள் பரவ தொடங்கியது. அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிகிச்சையிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும், தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அவரது ரசிகர்களும், நண்பர்களும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.
நாமும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றோம்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment