சென்னை: சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து
மதியம் 12 மணிக்கு 1000 கனஅடி திறக்கப்பட உள்ளது. ஏரி முழு கொள்ளவை எட்டிய
உடன் ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரி செம்பரம்பாக்கம்
ஏரி. 9 கிலோமீட்டர் நீளமும் மொத்தம் 24 அடி உயரம் உள்ள இந்த ஏரியில்
இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றில் நீர் வரும்.
அப்படியே அது கடலில் கலக்கும். இந்த ஏரியில் இருந்து அதிகப்படியான நீரை
வெளியேறியதால் கடந்த 2015ல் வெள்ளம் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம்
நிலவுகிறது.
இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம்
21.55 அடி, மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடி, நீர்வரத்து 4027 ஆக
உள்ளது. இதனிடையே மழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது ஏரி
இன்று நிரம்பிய உடன் அப்படியே தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. ஏரியில்
வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட
தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட
முக்கிய அறிக்கையில், இன்று(25.11.2020) மதியம் 12 மணி அளவில்
செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர்
திறக்கப்படவுள்ளதால் காவலூர்,குன்றத்தூர். நத்தம், திருமுடிவாக்கம்.
திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது
மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment