திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா, மிட்டூர் அடுத்த விளாங்குப்பம் செல்லும் வழியில் உள்ள ஆற்றில் பல வருடங்களுக்கு பிறகு நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் இந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது. அந்த நீரில் கோழி கழிவுகள் அதிகம் கலந்து வருகிறது.
இந்த ஆற்றில் மிட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கோழி கழிவுகளை அதிகம் கொட்டப்படுகிறது எனவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இதை தடுக்கும் வகையில் சுற்றுப்புற சுகாதார துறை சார்ந்த நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS






No comments:
Post a Comment